பதினெட்டு அடி உயர அதிசய ஆஞ்சநேயர். காரிய வெற்றிக்கு இவரை வணங்கினால் உடனடி பலன்
By : G Pradeep
நாமக்கல் மாவட்டத்தில் 246 அடி உயரத்தில் ஒரே கல் பெரிய மலை போல் உயர்ந்து காட்சி அளிக்கிறது . இதன் உச்சியில் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார் . இதற்கு கீழே நரசிம்மரை கரம் கூப்பி தொழுதவாறு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர் . தமிழகத்திலேயே மிக பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் இவர்தான் . 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செதுக்கபட்டவர் . மலைக்கு கீழ் நாமகிரி தாயார் கோயில் உள்ளது .
இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை கோயிலாகும். இந்த நாமகிரி தாயாரே கணித மேதை ராமானுஜருக்கு புருவ மத்தியில் தோன்றி பல கணக்கு புதிர்களை விடுவித்தாக கூறுவார்கள். ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையை எடுத்து இலங்கை சென்ற ஆஞ்சநேயர் மீண்டும் அதை வைப்பதற்கு இமாலயம் சென்று பிறகு கண்டகி நதியில் குளித்த போது கிடைத்த சாளக்கிரம கல்லை எடுத்து வான் வழியே வந்து கொண்டி ருந்தார் அப்போது சூரிய நமஸ்காரம் செய்ய நினைத்து கல்லை கீழே வைத்த போது மீண்டும் எடுக்க முடியவில்லை. அந்த கல்லே வளர்ந்து மலை யாக உள்ளது . இதை நோக்கி வணங்கிய வாறு ஆஞ்சநேயர் நிற்கிறார்
இந்த ஆஞ்சநேயர் 4 அடி உயர பீடத்தின் மீது இடையில் கத்தியோடு பெரிய விழிகளை கொண்டிருக்கிறார் . இவருக்கு திறந்த வெளியிலேயே அபிஷேகம் அர்சனை எல்லாம் செய்யப்பட கிறது . இவருக்கு கூரை கிடையாது . மேல் விமானம் கட்ட முயன்ற போது தான் வளருவதாகவும் மேல் விமானம் தனக்கு தேவை இல்லை என்றும் இங்குள்ள அர்ச்சகர் கனவில் தோன்றி கூறியுள்ளார் . வெயில் மழை என்று எல்லா காலங்களிலும் மேல் பாதுகாப்பு ஏதுமின்றி கம்பீரமாக காட்சி தருகிறார் ஆஞ்சநேயர் . காரிய வெற்றிக்கு இந்த ஆஞ்சரேயர் பெரிதும் துணை புரிவார் . முன்பு இந்த மலையில் கோட்டை அமைத்திருந்த திப்பு சுல்தானின் கனவில் வந்து வழிநடத்திய தாக வரலாற்று குறிப்புகள் கூட உள்ளது ..
இந்த ஆஞ்சநேயர் இன்னமும் வளர்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி . இவருக்கு 108. , 1008 உளுந்து வட மாலை சாற்றி வழிபடுவது காரிய தடைகளை நீக்கி வெற்றியை தரும் . அதுவும் நல்லெண்ணையில் செய்த வடைகள் இங்கு பிரசித்தம் மேலும் இவருக்கு பல வகையான புஷ்பங்கள் வnசனை திரவியங்கள், சிவப்பு சந்தனம் போன்ற வற்றை கொண்டு அலங்காரம் செய்கிறார்கள் . இவரை வழிபடுபவர்கறக்கு உடல் பலம் வாக்கு சித்தி காரிய வெற்றி போன்றவை எளிதில் கிடைக்கும்