வீட்டினுள் இறைவனுக்கு ஆலயம் அமைக்கலாமா? எனில் அதற்கான விதிமுறைகள் என்ன?
By : G Pradeep
டவுளை மனதார நம்பி, பிரார்த்தனை செய்தாலே ஒரு மன அமைதியையும் ஆனந்தத்தையும் பெற முடியும். உள்ளத்தில் கட்டும் கோவிலுக்கு எந்த விதியும் இல்லை, ஆனால் ஒருவர் இல்லத்திலேயே வீடு அமைக்க திட்டமிட்டால், அதற்கென சில விதிகள் சாஸ்திரங்களில் உண்டு.
வீடுகளில் கோவிலை அமைப்பது என்பது மிக நிச்சயமாக வீட்டிற்கு பல நல்ல அதிர்வுகளை அழைத்து வரும். மன ரீதியாக பாதுகாப்பான உணர்வை நாம் பெற முடியும். ஆனால் அப்படியொரு கோவிலை நாம் அமைக்கிற போது நினைவில் கொள்ள வேண்டிய சில விதிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி அல்லது நெல் போன்ற தானியங்கள் அந்த கோவில் அமைப்பில் நிச்சயம் இருக்க வேண்டும். பூஜைக்கு முன்பாக மஞ்சளில் அந்த அரிசியை தோய்த்து வைத்திருப்பது மேலும் சிறப்பானதாக கருதப்படும்.
வெற்றிலை, ஏலக்காய், கிராம்பு ஆகியவை அவசியம் அந்த இடத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். இது அந்த இடத்தின் செல்வ வளத்தை கூட்டும். ஒரு கோவிலை வீட்டினுள் நிர்மாணிக்கிறோம் என்றால் அதற்கான விதிமுறை என்பது, முதலில் கடவுளை அழைக்கும் சடங்கினை, மந்திரங்கள் மூலம் நிகழ்த்த வேண்டும். அவருக்கான ஸ்தானத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.
அபிஷேகங்களை நிகழ்த்த வேண்டும். முறையாக தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். சந்தனம், குங்குமம் போன்ற மங்களகரமான பொருட்கள் இடம் பெறுவதை உறுதி படுத்த வேண்டும். மறவாமல் பூக்களை கொண்டு அலங்கரித்து அர்பணித்து வணங்க வேண்டும். சிறியளவிலேனும் பிரசாதங்க்ளை படைக்க வேண்டும்.
தீபங்கள் ஏற்றும் விளக்குகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் வழிபாட்டிற்கென்று விரிக்கும் பாய் அல்லது ஆடையை எக்காரணம் கொண்டும் கால்களால் நகர்த்தாதீர்கள். கோவிலில் ஏற்றும் தீபம் நெய்யினால் தினசரி ஏற்றப்படும் ஆனால் வீட்டில் தெரியாமல் மறைந்திருக்கும் வாஸ்து தோஷங்கள் கூட நீங்கிவிடும்.
சிவ பெருமானை வணங்குவதாக இருந்தால், ஒரு போதும் சங்கினை கொண்டு அபிஷேகம் நிகழ்தாதீர்கள். கோவில் இருக்கும் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். கோவிலை நிர்மாணிப்பதென்பது வெறும் ஒரு நாளுக்கான பணி அல்ல. இது அன்றாடம் நாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பணி. முக்கிய பூஜை, முக்கிய நாளின் போது கலசம் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.