Kathir News
Begin typing your search above and press return to search.

கோடையிலும் குறையாத நீர்! மார்பளவு நீரிலிருக்கும் அதிசய நரசிம்மர் ஆலயம்!

கோடையிலும் குறையாத நீர்! மார்பளவு நீரிலிருக்கும் அதிசய நரசிம்மர் ஆலயம்!

G PradeepBy : G Pradeep

  |  11 March 2021 12:15 AM GMT

இந்தியாவில் மலைகள், குன்றுகள், காடுகள் என்று ஏராளமான இடத்தில் கோயில்கள் உள்ளன . குகை போன்ற அமைப்பிலும் நிறைய கோயில்கள் உள்ளன ஆனால் 300 அடி நீளமுள்ள மலைகுகையில் மார்பளவு தண்ணீரில் காட்சி தரும் நரசிம்மர் கர்நாடக மாநிலத்தில் மணிச்சூழ மலை குகையில் இருக்கிறார் . இது போன்ற நரசிம்மர் இந்தியாவிலேயே இங்கு தான் இருக்கிறார் .



இந்த குகையில் இருக்கும் நீர் ஒரு போதும் கூடவோ குறையவோ செய்வதில்லை . வெயில் காலத்திலும் நீர் குறையாமல் நரசிம்மர் மார்பளவு நீருடன் காட்சி தருகிறார் . இவருக்கு ஜர்னி நரசிம்மர் என்று பெயர். கர்நாடக மாநிலத்தின் பிதார் நகரத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது மணி சூழ மலை இங்குள்ள குகையில் 4 அடி முதல் 5 அடி வரை மார்பளவிலிருந்து கழுத்தளவு வரை தண்ணீர் இருக்கும் . மலையை குடைந்து போடப்பட்டிருக்கும் பாதையில் உள்ளே சென்றால் நிறைய வல்வால்கள் தொங்கி கொண்டு இருக்கும். நீரில் தடுமாறாமல் செல்ல தடுப்பு கம்பிகள் விளக்குகள் போடப்பட்டுள்ளன . வற்றாமல் ஊற்றெடுக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்குமே தெரிய வில்லை .





இந்த தண்ணீர் பல மூலிகைகளின் சக்தியை பெற்றுள்ளதால் இதில் நடந்து சென்றால் பல வியாதிகள் குணமாகும் என்று தெரிவிக்கிறார்கள் . இங்கு நரசிம்மர் சுயம்புவாக தோன்றியதாக வரலாறு கூறுகிறது . இந்த தல புராணம் ,ஒரு கதை சொல்கிறது . இரணியனை வதம் செய்த நரசிம்மர் சீற்றம் அடங்காமல் சுற்றித் திரிந்த போது ஜலாசரன் என்ற அசுரனுடன் சண்டையிட்டார் . சண்டை நீண்ட போது இந்த குகையில் ஒளிந்து கொண்ட அசுரனை நரசிம்மர் வதம் செய்தார் அந்த அரக்கனே ஜலமாக மாறியதாகவும் அவனின் வேண்டுகோளின் படி நரசிம்மர் அங்கேயே தங்கி விட்டதாகவும் புராணம் கூறுகிறது .

இந்த குகையில் நரசிம்மரோடு சேர்த்து சிவலிங்கமும் உள்ளது . இவர்களை தரிசிக்க செல்லும் பாதை கடினமான பாதையாக இருந்தாலும் இந்த கஷ்டங்களை தாண்டி உள்ளே வந்து தரிசனம் செய்தாலே அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள் .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News