ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணாயிரம் உடையார் திருக்கோவில்!
By : Kanaga Thooriga
கண்ணாயிரம் உடையார் கோவில் தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் குறுமாணக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கண்ணார் கோவில் என்ற பெயரும் உண்டு. இங்கிருக்கும் மூலவருக்கு கண்ணாயிரம் நாதர், கண்ணாயிரம் உடையார் மற்றும் சஹஸ்ரநாதீஸ்வரர் என்று பெயர். அம்பிகைக்கு முருகு வளர் கோதை நாயகி என்றும் கோதையம்மை மற்றும் சுகுந்த குந்தலாம்பிகை என்றும் பெயர். தேவாரம் பாடல் பெற்ற தலங்களுல் இந்த கோவிலும் ஒன்றாகும்.
அதுமட்டுமின்றி காவிரியின் வடக்கரை தலங்கள் வரிசையில் இக்கோவில் 17 ஆவத் ஸ்தலமாக உள்ளது. இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. பாண்டியர்கள், நாயகர்களால் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இக்கோவில் புணரமைக்கப்பட்டு வந்துள்ளது.
மாவலி சக்ரவர்த்தியின் அகங்காரத்தை போக்க மூன்றடி மண் கேட்டு வாமன ரூபம் எடுத்து திருவிளையாடல் நிகழ்த்தினார் திருமால். அந்த வாமன மூர்த்திக்கு குறுமாணி என்று திருப்பெயர். குறுமாணி ஆகிய திருமால் இங்கே இருக்கும் சிவபெருமானை வணங்கியதால் இந்த இடத்திற்கு குறுமாணக்குடி என்று பெயர் வந்தது என்பது ஐதீகம்.
ஒரு முறை இந்திரன் அவனுடைய தவறான செயலுக்கு கவுதம முனிவரின் சாபத்திற்கு ஆளானான். அந்த தவறுக்கு துணை போனதால் கவுதம முனிவரின் மனைவி அகலிகையும் சாபம் கல்லாக சாபம் பெற்றார். இராமனின் காலடி பட அகலிகை விமோசனம் பெறுவார் என்றார். அதை போலவே இந்திரனின் சாபம் இங்குள்ள ஈசனை வணங்கியதால் நிவர்த்தியானது. இந்திரனின் சாபத்தை போக்க ஈசன் ஆயிரம் கண்களை ஏற்றார் என்பது புராண கதை. அதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு கண்ணாயிரம் உடையார் என்று திருப்பெயர்.
தோதையம்மையின் சந்நிதியின் மேல் நவகிரகங்களின் கட்டம் வடிக்கப்பட்டுள்ளதால் நவகிரக பிரச்சனை, தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வர சிக்கல்கள் தீரும். அதுமட்டுமின்றி குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு நிகழும் அர்த்த ஜாம பூஜையில் நெய்வேத்யம் அர்பணித்து அதை உண்டால் வினைகள் தீரும் என்பது நம்பிக்கை. கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் இங்கே தீபமேற்றி வழிபடுவதும் வழக்கம்.
ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்திகை சோமவாரம் மார்கழி திருவாதிரை, மாசியில் வரும் சிவராத்திரி ஆகிய விழாக்கள் இங்கே கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
Image : Dinamalar