Kathir News
Begin typing your search above and press return to search.

சிரித்த முகத்துடன் சாந்த மூர்த்தியாக நரசிம்மர் இருக்கும் அதிசய ஆலயம்!

நரசிங்கபுரம் இலட்சுமி பெருமாள் திருக்கோவில்

சிரித்த முகத்துடன் சாந்த மூர்த்தியாக நரசிம்மர் இருக்கும் அதிசய ஆலயம்!
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  12 Jan 2022 6:00 AM IST

சென்னையிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து 21 கி.மீ தொலைவிலும் ஶ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் அமைந்துள்ளது. திருவள்ளூரில் அமைந்துள்ள இக்கோவில் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் விதமாக இன்றும் அதே பெருமையை தக்கவைத்துள்ளது இக்கோவில். திருவள்ளூர் மாவட்டத்தில் நரசிங்கபுரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

விஜயநகர பேரரசுகள் அரசியல் மற்றும் சமயம் இரண்டிற்குமே சமமான முக்கியத்துவத்தை வழங்கினார்கள். ஶ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலுடன் இந்த கோவிலுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த இரு கோவில்களும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று இல்லை என்ற போதும் இக்கோவில் விஜயநகர பேரரசுகளால் போற்றி பாதுகாக்கபட்டன.

இக்கோவிலில் இருக்கும் அதிசயம் யாதெனில், இங்கே இருக்கும் நரசிம்ம மூர்த்தி ஏழரை அடி உயர்ந்திருக்கிறார். வலது காலே கீழே வைத்து இடது காலை மேலே மடக்கி இலட்சுமி தேவியை மடியில் அமர்த்தியிருக்கிறார். மேலும் தன இது கையால் அம்பிகையஇ ஆலிங்கனம் செய்திருக்கிறார். இந்த கோலத்திற்கு பரஸ்பர ஆலிங்கனம் என்று பெயர்.

காரணம் நரசிம்மர் என்பவர் பெரும்பாலு உக்கிர நரசிம்மராகவே காட்சி அளிப்பார். அப்போது இலட்சுமி தேவி நரசிம்மரை சாந்தப்படுத்தும் நோக்கில் அவரை நோக்கியவாறே திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோவிலில் தான் நரசிம்மர் சாந்த மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கே சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பதால் இலட்சுமி தேவி பக்தர்களை பார்த்தவாறு காட்சி தருகிறார்.

அதுமட்டுமன்றி இங்கிருக்கும் பெரிய திருவடி அதாவது கருடாழ்வார் நான்கடி உயரத்தில் தன் உடலெங்கும் சர்ப்பத்தையே அணிகலனாக பூட்டி அதிசய ரூபத்துடன் காட்சி தருகிறார். இங்கிருக்கும் நரசிம்மரை தொடர்ச்சியாக 9 சுவாதி நட்சத்திர தினங்களில் வணங்கினால் சகல விதமான நோய் நொடி, பொருளாதார பிரச்சனை ஆகியவை தீரும் என்பது ஐதீகம். கருடனை 16 வகையான சர்பம் சூழ்ந்து காட்சி தருவதால் இங்கே வழிபட்டால் நாக தோஷம் என்பது நம்பிக்கை.

மற்ற அவதாரத்தில் எல்லாம் எதிரிகளை எப்போது எங்கே அழிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அவதாரத்தில் எப்போது எங்கு பிரகசலாதன் அழைத்தாலும் செல்ல வேண்டும் என்பதற்காக தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் பெருமாள். இக்கோவிலில் அஷ்டலட்சுமிகளும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News