Kathir News
Begin typing your search above and press return to search.

காதற்ற ஊசியால் பட்டினத்தார் இறையை உணர்ந்த அதிசய தலம்! பூம்புகார் ஆலயம் !

காதற்ற ஊசியால் பட்டினத்தார் இறையை உணர்ந்த அதிசய தலம்! பூம்புகார் ஆலயம் !

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  28 Dec 2021 12:30 AM GMT

தமிழகத்தின் அழகு நிறைந்த நகருள் ஒன்று பூம்புகார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது காவேரி பூம்பட்டிணம் அல்லது புகார் நகரம். இது தமிழகத்தின் தொல்லியல் நகரங்களுள் ஒன்றாகும். பட்டினத்தார் அவதரித்த இடம் இது. இங்கு மூலவராக அருள் பாலிக்கும் சிவபெருமானின் பெயர் பல்லவனேஸ்வரர் ஆகும். இங்குள்ள அம்பிகையின் பெயர் செளந்திரநாயகி.

தேவார பாடப்பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. காவேரியின் வடகரையில் அமைந்துள்ள கோவில்களின் வரிசையில் இது 10 ஆவது தலமாகும். இங்கு சிவபெருமானுக்கு நடைபெறும் விழாவை காட்டிலும் பட்டினத்தாரின் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு அடியார் உற்சவம் என்று பெயர். 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறும் இதில் பட்டினத்தார் முக்தி பெரும் நிகழ்வு மிகவும் பிரசித்தம். காவிரி பூம்பட்டிணத்தில் அவதரித்தவர் என்பதாலேயே இவருக்கு பட்டினத்தார் என்று பெயர். இவருடைய திருத்தல யாத்திரையை பூம்புகாரில் தொடங்கி திருவொற்றியூரில் நிறைவு செய்தார்.

இக்கோவிலின் தல விருட்சம் மல்லிகை. இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், ஒருமுறை திருவெண்காடர் என்று அழைக்கப்பட்டவர் கடல் கடந்து வாணிபம் செய்பவராவார். அவருடைய மனைவி சிவகலை. இவர்களுக்கு பிள்ளை இல்லை. சிவனை நினைத்து வழிபட்டதால் அவர்களுக்கு மருதாவாணன் எனும் மகன் தத்து கிடைத்தான். சிவபெருமான் தான் திருவிளையாடல் நிகழ்த்த மருதவாணராக அவதரித்தவர். தந்தையை போலவே வாணிபத்தில் ஈடுபட்டு வந்த மருதவாணன் ஒரு முறை சம்பாதித்த பணத்தை பெட்டியில் வைத்து எடுத்து வர,, அதை ஆர்வத்துடன் திறந்து பார்த்தார் திருவெண்காடர், அதில் இருந்தது வெறும் உமி. இதை கண்டு அதிர்ச்சியுற்றவர், மகன் இவ்வாறு செய்துவிட்டான் என்ற ஆற்றாமையில் பெட்டியை தூக்கி வீச, அதிலிருந்து அவருக்கு ஒரு வாசகம் கிடைத்தது.

"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே. " "

அதாவது காது இல்லாத உபயோகமற்ற ஊசி கூட ஒரு மனிதன் இறக்கும் போது அவனுடன் வாராது என்கிற பெரும் உண்மையை உணர்ந்தார். இந்த உண்மை உணர்ந்ததும் இல்லற வாழ்வை துறந்து உண்மை பரம்பொருளை உணர்ந்து தனக்கு முக்தி வேண்டினார். மேலும் இவரே பிற்காலத்தில் பட்டினத்தார் என்றும் அழைக்கப்பட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News