Kathir News
Begin typing your search above and press return to search.

பொங்கல் வெறும் திருவிழா அல்ல கலாச்சாரத்திற்கு நன்றி செலுத்தும் பெருவிழா

பொங்கல் வெறும் திருவிழா அல்ல  கலாச்சாரத்திற்கு நன்றி செலுத்தும் பெருவிழா
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  16 Jan 2023 12:30 AM GMT

ஒரு பண்டிகை, பல்வேறு பெயர்களில் பல்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக திகழ்வது பொங்கல். 14 – 17 வரை வெவ்வேறு விதங்களில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை. அதன் இறுதி நாளில் உழவர் தினத்துடன் நிறைவுப்பெற்றது. காரணம் தமிழகத்தில் உழவு என்பது எப்போதுமே ஒரு தொழிலாக இல்லாமல் கலாச்சாரமாகவே இருந்து வந்துள்ளது.

இது முதன்மையான தொழிலாக தமிழகத்தில் திகழ்வது தனிச்சிறப்பு. பொங்க என்பது ஒரு உணவின் பெயர் என்பதை தாண்டி. பொங்கல் என்பது வளமும், நலமும் ஒருவர் இல்லத்தில் மனதில், சமூகத்தில் பொங்குவதன் குறியீடாகாவே கருதப்படுகிறது. புத்தரிசியும், புதுப்பானையும் புதுமையான வரவுகளில் குறியீடாகவும் விளங்குகிறது.

பல மாதங்கள் போற்றி பாதுகாத்த பயிர்களை அறுவடை செய்கிற போது. அந்த அறுவடைக்கு உதவிய அம்சங்களான சூரியன், இயற்கை, கால்நடை, உழவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள். புதிய அறுவடையால் இல்லமும், அந்த அறுவடை நல்கும் வளத்தால் நலத்தால் உழவர்களின் உள்ளத்தில் இன்பமும், உற்சாகமும் பொங்கி ஊற்றெடுக்கும் திருநாள்.

மற்ற பண்டிகைகளை விடவும், இந்த பண்டிகைக்கு வீடுகளை, அலுவலகத்தை வாழ்வாதாரமாக திகழும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வது வழக்கம். பழையதை கழிப்பதென்பது, புதுமையை வரவேற்பதென்பதும் இதன் பொருள்.

கடவுளை வழிபடுவது இயல்பு. ஆனால் நம்மை சுற்றியிருக்கிற அனைத்து அம்சத்திலும் இறைவனை கண்டு வழிபடும் தன்மை இந்தியர்களுக்கே உரித்தானது. ஆயுத பூஜை அன்று நம் தொழிலுக்கு உதவுக் ஆயுதங்களுக்கு, உழவர் திருநாளில் உழவுக்கு பயன்படும் பொருட்களுக்கு, பொங்கல் அன்று சூரியனுக்கு, மாட்டு பொங்கல் என்று கால்நடைகளுக்கு இந்திய பாரம்பரியத்தில் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

சூரியனிலிருந்து எழுகிற ஒளி நம் வாழ்வில் நுழைந்து பிரகாசத்தை நல்க வேண்டும் என்றும். அதனால் பரிசுத்தமான அறிவு, ஞானம் ஒருவருக்கு சாத்தியப்பட வேண்டும் என்றும் குறிப்பதாகவே இவ்விழா அமைகிறது. சூரியன் என்பது தன்னளவில் ஒளியை இந்த பிரபஞ்சத்திற்கு வழங்குகிறது, ஆனால் இந்த பிரபஞ்சத்திடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு மனிதனும் தான் செய்கிற செயலுக்கு எதிர்பார்ப்பு ஏதுமின்றி இயங்க வேண்டும். அன்பும், மகிழ்ச்சியும் பொங்க வேண்டும். பல மகிழ்வான பரிமாற்றங்களை காண வேண்டும். அதுவே இந்த நான்கு நாள் கொண்டாட்த்தின் பயனாக இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News