Kathir News
Begin typing your search above and press return to search.

கனவில் பாம்புகளா? அவை உணர்த்தும் பலன்கள் என்ன? ஆச்சர்ய தகவல்

கனவில் பாம்புகளா? அவை உணர்த்தும் பலன்கள் என்ன? ஆச்சர்ய தகவல்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  7 July 2022 12:58 AM GMT

நம்மில் பலருக்கு பாம்புகள் குறித்து கனவுகள் வருவது வழக்கம். கனவினில் பாம்புகள் வந்தால் அதற்கு சாஸ்திரத்தில் பல்வேறு அர்த்தம் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் அது நல்ல விளைவாகவும் இருக்கும். சில சமயங்களில் அது தீய விளைவாகவும் இருக்கும்.

பாம்புகளுக்கு தன்னை மறைத்து கொள்ளும் இயல்பு உண்டு. அதாவது தன்னுடைய இரையை கண்ட பின் சீறிப்பாயும். தேவைக்கேற்ப பதுங்கியிருக்கும். எனவே கனவுகளில் பாம்புகளை காண்பதென்பது சில சமயங்களில் நமக்கு இயற்கை தருகிற எச்சரிக்கையாக எடுத்து கொள்ள படுகிறது. அதாவது யாரேனும், நம்மை உடல்ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

பாம்புகள் எப்போதும் அச்சத்திற்குரியவை மாத்திரம் அல்ல. அவை நல்ல நேர்மறையை ஆற்றலையும் தரக்கூடியது. கனவுகளில் பாம்பு படம் எடுப்பதை போன்ற காட்சி வந்தால், நம்முடைய தீவிரமான இலட்சியங்களை, மனதிற்குள் ஆழப்பதிந்திருக்கும் விருப்பங்களை வெளிக்கொணரும் நேரம் நெருங்கியிருக்கிறது என பொருள்.

பாம்புகள், ஆன்மீக பாதையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக கருதப்படுகிறது. ஆன்மீக சாதகர்களின் குண்டலினியுடன் பாம்பு ஒப்பிடப்படுகிறது. ஆன்மீக பாதையில் ஈடுபாடு கொண்டவரின் கனவில் பாம்பு வருமேயாயின், அது அவருடைய ஆன்மீக பாதை சிறப்பாக அமையவிருப்பதை குறிக்கிறது.

பாம்புகள் குறித்த அச்சமும், நெருக்கமும் நாம் பாம்புகளை எவ்வாறு அணுகுகிறோம் என்பதை பொருத்தே அமைகிறது. பாம்பை பிடிக்கிறவர்களுக்கு பாம்புகள் குறித்த அச்சம் இருக்காது. அப்போது அவர்களின் கனவில் வருகிற பாம்புகள் உணர்த்தும் சகுனம் வேறு. ஆனால் ஒரு சாதாரண மனிதர், குறிப்பாக பாம்புகள் குறித்த அதிக அச்சம் கொண்டவர் எனில் அவருடைய கனவில் வருகிற பாம்புகள் உணர்த்தும் அர்த்தம் வேறு. எனவே நிமித்த சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒவ்வொருவருக்கும் அர்த்தம் என்பது மாறுபாடும். நாம் பாம்புகளை பார்த்து அச்சப்படுகிறோமா அல்லது நெருக்கமாக உணர்கிறொமோ என்பதை பொருத்தே அதன் அர்த்தங்களும் மாறுபடும்.

மேலும், கனவுகளில் குட்டி பாம்புகள் என்பது நிஜத்தில் பெரிதாக துன்பத்தை தராது, ஆனால் நாட்கள் நகர அது வளரும் காலத்தில் நிச்சயம் அச்சுருத்தலானதாக இருக்கும். எனவே குட்டி பாம்புகள் கனவில் வந்தால், நம் எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களை புறக்கணித்தால் என்றாவது நமக்கு அச்சுருத்தலாக மாறுவார்கள் என்று பொருள்.

மொத்தத்தில் இவையனைத்தும் கணிப்புகள் மட்டுமே, இது மனிதருக்கு மனிதர், சூழலுக்கு சூழல் மாறுபடும். எனவே இதனை வெறும் ஒரு கணிப்பு என்ற வகையில் எடுத்து கொள்ளலாமே தவிர இதன் உண்மை தன்மை குறித்த ஆய்வுகள் இன்றளவும் நடந்த வண்ணமே உள்ளன.

நன்றி: ஸ்பீக்கிங் ட்ரீ

Next Story
கதிர் தொகுப்பு
Trending News