கிருஷ்ண பகவான் உயிர் பிரிந்த அதிசய இடத்தில் அமைந்திருக்கும் ஆச்சரிய ஆலயம்!
By : G Pradeep
குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம். சிவாலயங்களுள் மிகுந்த பிரசத்தி பெற்றது. குஜராத் மாநிலத்தில், கிர்சோமநாத் மாவட்டத்தில், பிரபாச பட்டிண கடற்கரையில் அமைந்துள்ளது இக்கோவில் . 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான தலமாக இது திகழ்கிறது
மேலும் இக்கோவிலில் தான் ஆதி சங்கரர் அவர்கள் ஸ்தாபித்த சாராதா பீடம் உள்ளது. ஜோதி லிங்கத்தின் பின் அமைந்துள்ள அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்று பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியது.
இந்த கோவில் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெருவதை போலவே, இந்திய வரலாற்றில் பெரும் முக்கியத்துவத்தை பெரும் கோவிலாகவும் திகழ்கிறது. அதன் காரணம், இஸ்லாமிய மன்னர்கள் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கையின்றி அதை எதிர்க்கும் மனநிலையில் இருந்ததால் கிட்டதட்ட 6 முறை இந்த கோவிலை இடித்து தள்ளி தரைமட்டமாக்கியுள்ளனர்.
இங்குள்ள சிவ பெருமன் அதீத ஒளியுடன் பிரகாசிப்பதால் அந்த பிரகாசத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முற்பட்டும், இங்குள்ள செல்வ வளத்தின் பெருமையை அறிந்தும் 17 முறை படையெடுத்து, இறுதியாக பல்லாயிரக்கணக்கான் இந்து மக்களை, கொன்று குவித்து கோவிலை கொள்ளையடித்தான் கஜினி என்பது வரலாறு. அன்று அவன் எழு வண்டிகள் நிறைய அள்ளி சென்ற தங்கமும், வெள்ளியும் இன்றைய மதிப்பில் பல்லாயிரம் கோடி தேரும் என்கிறார்கள் ஆய்வாளார்கள்.
அன்று அவன் திருடி சென்ற தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவரும் முயற்சியில் 1842 ஆம் ஆண்டின் கவர்னர் ஜென்ரல் லார்ட் எல்லன்பாரோ முயன்ற போது இங்கிலாந்து நாட்டு அரசியலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒரு தலை பட்சமாக அவர் செயல்படுகிறார் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே திரும்ப எடுத்து வரப்பட்ட கதவுகள் இன்றும் ஆக்ராவில் இருப்பதாக சொல்லபடுகின்றது.
ஆறு முறை தரைமட்டமாக்கப் பட்ட இந்த கோவில், ஒவ்வொறு முறையும் பிரமாண்டமாக எழுந்தது. இன்று நாம் காணும் கோவில் சாளுக்கியரின் கட்டிடக்கலையின் அம்சமாக பிரமிடு வடிவில் விசாலமாக கட்டப்பட்டுள்ளது .
இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், சோமன் என சொல்லப்படும் சந்திரன் தன்னுடைய 27 மனைவிமார்களில் ரோகிணியின் மீது மட்டும் பிரியமாக இருந்துள்ளார். அந்த 27 பேரும் தட்சப்பிரசாபதியின் மகள்களாவர். இந்த 27 பேரில் த்ங்கள் ஒரு சகோதரியின் மீது மட்டும் பிரியமாக இருப்பதால் துன்புற்ற மற்ர 26 பேரும் தந்தையிடம் முறையிட்டனர். மகள்களின் துன்பத்தை கண்டு துயருற்ற தட்சப்பிரசாபதி சந்திரனுக்கு தொழுநோய் வர சாபமிட்டார். அந்த நோய் தீர இங்குள்ள சோமநாதரையே வணங்கி சாப விமோசனம் பெற்றார் சந்திரன்.
எல்லாவற்றிற்கும் மேற்பட்ட ஆச்சர்யமாக கிருஷ்ண பகவான் தன்னுடைய மண்ணுலக வாழ்வை முடிக்க எண்ணி, ஒரு வேடனால் அவர் காலில் அம்பு எய்யப்பட்டு அவர் உயிரை உதறிய இடமும் இதுவே.
மேலும் இங்குள்ள சிவலிங்கம் தரையில் இருந்து அமைந்ததாக இல்லாமல், அந்தரத்தில் இருப்பதை போன்று இருப்பதாக இதன் அதிசயம் குறித்து பல ஆய்வாளர்கள் சிலாகித்து சொல்கின்றனர். குஜராத்தின் முதன்மையான சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.