பூரிக்க செய்யும் புராணம். உலகின் மிகப்பெரிய கோவில் வளாகம் அதிசய ஶ்ரீரங்கம்!
By : G Pradeep
ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்ட வாறு ஶ்ரீ ரங்கத்தில் மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார். இத்திருத்தலத்தை பூலோக வைக்குண்டம் என்றும் சொல்வதுண்டு. 108 வைஷ்ணவ திவ்யதேசங்களில் முதன்மையானதாக கருதப்படுவது ஶ்ரீ ரங்கம். காவேரியின் கரையில் அமைந்திருக்கும் இத்திருத்தலம் பெரும் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்டது-.
ஶ்ரீ ரங்கநாதர் கோவில் குறித்து சிலப்பதிகாரத்தில் குறிப்பு உண்டு. ஆனாலும் தொல்லியில் பதிவுகள் 10 ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைக்கபெறுகிறது. மேலும் இத்திருத்தலம் எங்கும் சோழ, பாண்டிய, ஹொய்சாலா மற்றும் விஜயநகரா பேரரசுகளினால் உருவாக்கப்பட்ட பல கல்வெட்டுகள் கிடைக்கபெருகின்றன. இந்த கோவிலின் கட்டமைப்பு, கட்டிடக்கலையின் ஒரு அற்புத படைப்பு என்றே சொல்லலாம்.
பல காலங்களாக இந்த கோவிலில் அடர்ந்த வனங்களால் சூழப்பட்டு இருந்தது . இதை கவனித்த ஒரு சோழ அரசர், அங்கிருந்த ஶ்ரீரங்கரின் விக்ரகத்தை கண்டு கோவில் அமைக்க முனைந்தார். அதுவே இன்று உலகின் மிகப்பெரிய கோவில் வளாகம் என்ற பெருமையுடன் திகழ்கிறது.
மாலிக் கபூர் என்கிற இஸ்லாமிய அரசன் 1311 ஆம் ஆண்டு இக்கோவிலின் மீது படையெடுத்து வந்து இக்கோவிலின் விமானத்தை தில்லிக்கு கொண்டு சென்றராம். இதனை கண்ட பக்தர்கள் தில்லிக்கு சென்று தங்கள் வீர தீர செயல்களை பரைசாற்றி எடுத்து செல்லப்பட்ட விமானத்தை மீட்ட போது மன்னரின் மகள் மகா விஷ்ணுவின் பால் தீராத பற்று கொண்டு அவரையே சரணடைந்ததாக வரலாறு உண்டு.
மகளை இழந்த விரக்தியில் மீண்டும் 1323 ஆம் ஆண்டு மாலிக் கபூர் மீண்டும் படையெடுக்க வருவதை அறிந்த 13000 பக்தர்கள் அத்திருவிக்ரகத்தை சுமந்து பல ஊர்களுக்கு சென்றுள்ளனர். மதுரை, கேரளா, மைசூர், திருநாராயணபுரம் ஏன் திருப்தியில் கூட சில நாட்கள் வைத்திருந்து பின் ஶ்ரீ ரங்கம் எடுத்து வந்தனர்.
இந்த கோவில் 156 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உலகின் மிகப்பெரிய கோவில் வளாகமாக திகழ்கிறது. அனைத்து பராக்ரமங்களின் சுற்றுச்சுவரை மொத்தமாக கணக்கிட்டால் 6 மைல்களை தாண்டிய நீளம் உண்டு.
கிட்டதட்ட 21 கோபுரங்களை கொண்ட வளாகம் இதில் இராஜகோபுரம் 239.5 அடி உயரம் கொண்ட து.
வரலாறு, இலக்கியம், பாரம்பரியம் என எல்லாம் தளத்திலும் பெரும் முக்கியத்துவம் கொண்ட ஶ்ரீ ரங்கம் கோவில் பக்தியில் உரைந்து பெருமாளின் பாதம் சரண்புகுவோருக்கு பூலோக வைகுந்தமாகவே திகழும் பெரும் புகழ் கொண்டது.