Kathir News
Begin typing your search above and press return to search.

இக்கோவிலில் வழிபட்டால் நம் ஜாதகமே புதிதாக ஸ்ரிஷ்டிக்கப்படும் ஆச்சர்யம்

இக்கோவிலில் வழிபட்டால் நம் ஜாதகமே புதிதாக ஸ்ரிஷ்டிக்கப்படும் ஆச்சர்யம்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  23 Sep 2022 12:31 AM GMT

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது, ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும், பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும் அனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த நடராஜர் சிலை ஆசிய கண்டத்திலேயே இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் உள்ளது. இந்த சிலை உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும். இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும்.

இந்த கோவிலில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார். வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜபம் செய்யும்போது பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன. இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது. இங்குள்ள

இங்குள்ள கொடி மரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 15 திதிகள் 12 ராசிகள் 9 கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக ஸ்ரிஸ் ஷ்டிக்கப்படுகிறது என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை. இந்த கோவில் திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை வழியில் உள்ள பாடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News