தொண்டைமான் மன்னர்களோடு அம்பாள் நேருக்கு நேர் உரையாடிய அதிசய ஆலயம்!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கோகர்ணம். அங்கு புகழ்பெற்ற ஆலயமாக விளங்குவது தான் திருக்கோகர்ணம். இங்கிருக்கும் மூலவருக்கு திருக்கோகர்ணீஸ்வரர் என்பது திருப்பெயர்.
இந்த கோவில் பல்லவர் காலத்தை சேர்ந்த குடவரை கோவிலாக கருதப்படுகிறது. இதை கட்டியவர் பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் ஆவார். இவருக்கு பின் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளாலும் இந்த கோவில் புணரமைக்கப்பட்டது .
தமிழகத்தை சேர்ந்த மிகப்பழமையான இந்து ஆலயங்களின் வரிசையில், குறிப்பாக புழக்கத்தில் உள்ள கோவில்களின் வரிசையில் இக்கோவில் இரண்டாவதாக கருதப்படுகிறது, முதல் கோவில் முந்தேஸ்வரர் கோவிலாகும்.
இந்த கோவில் வளாகத்தினுள கணபதிக்கும், கங்கதாரர் மற்றும் சப்தகன்னியருக்கு சந்நிதிகள் உண்டு. அதுமட்டுமின்றி இந்த கோவில் தலத்தில் மகிழ மரத்திற்கு பின்புறம் சதாசிவ பிரம்மானந்தா அவர்களின் திருவுருவமும் உண்டு. இவர் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் அரசர்களின் குருவாக கருதப்படுகிறார்.
இக்கோவிலுள்ள அம்பாளுக்கு பிரகதாம்பாள் என்பது திருப்பெயர். தொண்டைமான் குலத்தை சேர்ந்தவர்களின் திருப்பெயரோடு சேர்த்து அடைமொழியாக ஶ்ரீ பிரகதாம்பதாஸ் என்ற பெயரும் வருவது வழக்கம், எனவே இந்த அம்பாள் தொண்டைமான் அரசர்களின் குல தெய்வமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தொண்டைமான் அரசர்களால் வெளியிடப்பட்ட நாணயத்தில் பிரகதாம்பளின் திருவுரும் ஒருப்பக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசினை அம்மன் காசு என்றும் அம்மன் சல்லி என்றும் அழைப்பது வழக்கம்
இங்கு அரைக்காசு அம்மன் என்ற சந்நிதி உண்டு. இந்த சந்நிதியில் நின்று தேடினால் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் அதிசயம் நிகழ்வதாக மக்கள் சொல்கின்றனர். அதாவது தொலைந்த பொருளை எண்ணி இந்த அம்மனுக்கு சிறிய அளவிலான வெல்லத்தை வைத்து வழிபடுகின்றனர். இதன் மூலம் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் அதிசயம் நிகழ்கிறதாம். அதுமட்டுமின்றி குழந்தை வரம் இல்லாது தவிப்பவர்களுக்கு தாயாக இந்த அம்மன் திகழ்கிறார், வேண்டுவோருக்கு குழந்தை வரம் அளித்து அருள் பாலிக்கிறார்.
இக்கோவிலின் சிறப்பு யாதெனில், காமதேனு பசுவின் சாப்பத்தை சிவபெருமான் போக்கிய இடம் இதுவென்பதால், இத்தலம் வருபோரின் பாவங்கள் நீங்க பெருகின்றனர் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி இங்கிருக்கும் பிரகதாம்பாள் தொண்டைமான் மன்னர்களோடு நேருக்கு நேர் உரையாடினார் என்பது புராணம்.