Kathir News
Begin typing your search above and press return to search.

திருமங்கையாழ்வார் அவதரித்த ஆச்சர்ய திருத்தலம்! தேவராஜ பெருமாள் ஆலயம்

திருமங்கையாழ்வார் அவதரித்த ஆச்சர்ய திருத்தலம்! தேவராஜ பெருமாள் ஆலயம்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  24 Feb 2022 6:00 AM IST

தமிழகத்தின் மயிலாடுதுறையில் திருநகரி எனும் இடத்தில் அமைந்துள்ளது வேதராஜன் பெருமாள் கோவில். திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்று மங்களாசனம் செய்யப்பட்ட கோவில் இதுவாகும். அதுமட்டுமின்றி 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும். இங்கிருக்கும் பெருமாள் வேதராஜன் என்றும் இலட்சுமி தேவியார் அம்ருதவள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்திருத்தலம் ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பிறந்த தலமாகும்.

ஏழடுக்கு கோபுரம் கொண்ட இத்திருத்தலம் சோழர்களால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசர் மற்றும் தஞ்சை நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது. இந்த திருத்தலத்தில் திருமங்கை ஆழ்வார்க்கு விஷ்ணு பெருமாள் நேரடியாக தரிசனம் தந்தார் என்பது வரலாறு.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், கர்த்தம பிரஜாபதி மோட்சம் வேண்டி இங்கு தவம் புரிந்தார். அந்த தவத்தில் திருப்தி அடையாதவராக இருந்த மஹா விஷ்ணு அவரை சோதிக்க எண்ணி தரிசனம் கொடுக்காமல் இருந்தார். இருப்பினும் மஹா இலட்சுமி அவருக்கு உதவ எண்ணி இத்திருத்தலத்தில் உள்ள கமல தீர்த்தத்தில் ஒழிந்து கொண்டார். இலட்சுமி தேவியை தேடி வந்த மஹா விஷ்ணு இலட்சுமியை இங்கே கண்ட போது ஆலிங்கனம் செய்து கொண்டார். இதே கோலத்தில் அவர் அருகிலுள்ள திருவாலியிலும் இருப்பதால் திருநகரிக்கும், திருவாலிக்கும் ஒரே வரலாறு தான்.

கர்த்தம பிரஜாதபதி மூன்று யுகத்திலும் பெறாத பிராப்தத்தை கலியுகத்தில் நீலன் என்ற படைத்தலைவனாக பிறந்த போது பெற்றார். அதாவது கலியுகத்தில் அவர் நீலனாக அவதரித்த திருவாலியில் குமுதவல்லி நாச்சியாரை மணக்க விரும்பினார். ஒரு வருடம் முழுவதும் வைஷ்ணவர்களுக்கு உணவளித்தால் உங்களை மணப்பேன் என்றதால். தன்னிடமிருந்த பொருள் அனைத்தையும் கொடுத்து அவர் உணவளித்து வந்தார். ஒருகட்டத்தில் பொருள் அனைத்தும் தீர்ந்த பின்னர் தான் மேற்கொண்ட சங்கல்ப்பத்தை நிறைவேற்ற வழிப்பறி செய்ய தொடங்கினார். இந்த சூழலிலிருந்து அவரை மீட்பதற்காக திருவாலி அருகே தேவராஜபுரத்தில் பெருமாள் இலட்சுமி தேவியை மணந்து கொண்டு மானுடர் வேடத்தில் அவ்வழியே வந்தார். வந்திருப்பது பெருமாள் என்று அறியாமல் அவரிடமே வழிப்பறி செய்ய முயன்ற போது அஷ்டாட்சர மந்திரத்தை ஓதி அவரை ஆட்கொண்டார் என்பது வரலாறு.

இத்தலத்தில் திருமங்கையாழ்வாருக்கென தனி சந்நிதியும் உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News