Kathir News
Begin typing your search above and press return to search.

பொங்கலின் விழாவின் முக்கியத்துவம் என்ன?சுவாரஸ்ய பின்னனி

பொங்கலின் விழாவின் முக்கியத்துவம் என்ன?சுவாரஸ்ய பின்னனி

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  15 Jan 2023 12:15 AM GMT

கதிர் வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கல் பண்டிகை என்பது பயிர்களை விளைய செய்து. சூரியனுக்கும் இந்திரனுக்கும் நன்றி சொல்லி வழிபாடு செய்யும் நிகழ்வாகும். இதற்கு புராணங்களில் காரண கதையும் இருக்கிறது, ஒரு முறை சிவபெருமான் நந்தி தேவரை அழைத்து பூமியில் எல்லோரும் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் படி அறிவுறுத்துமாறு கூறினார், ஆனால் நந்தி தேவர் பூமிக்கு வந்து தான் சிவபெருமானிடம் கேட்ட விஷயத்தை மறந்து தினமும் நன்றாக உணவு உண்ண சொல்லி விட்டு மாதம் ஒரு முறை மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னார். இதை கேள்விப்பட்ட சிவபெருமான் ஆத்திரம் அடைந்து நந்தி தேவரை பூமியில் பிறந்து மனிதர்களால் வேலை வாங்கப்படும்படியாக சபித்தார். இதன் பயனாகவே பூமியில் மனிதர்களுக்கு வேலை செய்யவும், மனிதனின் உணவு தேவைக்காக பூமியில் உழவு செய்வதற்காகவும் கால்நடைகள் பயன்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட மாடுகளுக்கு தை மாதம் முதல் தேதியில் நன்றி சொல்வதற்காகவே இந்த பண்டிகை கடைபிடிக்கப்பட்டு வருவதாக ஐதீகம்.

கலாச்சார வழக்கத்தின் படி இது ஒரு முழுமையான சூரிய வழிபாடாகும். இதே நாளில் வடா மாநிலத்திலும் உலகத்தின் பல பகுதிகளிலும் இந்த சூரியனை வணங்குகின்றனர். இயற்கை வழிபாட்டின் முழு முதல் அடையாளமே சூரியன்தான். சூரியன் தை மாதத்தில் பூஷண என்ற பெயருடன் ஆயிரம் கதிர்களுடன் ஒளி வீசுபவன். சூரியன் வடக்கு நோக்கி செல்லும் உத்தராயண காலத்தின் முதல் நாள் இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. சூரியனை பிரதான தெய்வமாக கொண்டு வழிபடப்படும் இந்த பொங்கல் திருவிழா சூரிய வெளிச்சம் காலை நேரத்தில் வெட்ட வெளியில் படும் இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.

சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பது "மகா ரவி" எனப்படும் இதையே வட மாநிலங்களில் மகரசங்கராந்தி என்று அழைக்கிறார்கள்.

இது ஒரு புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த உத்தராயண காலம் ஆரம்பிப்பது தை மாதத்தில்தான், தை மதம் தொடங்கி மாசி பங்குனி சித்திரை வைகாசி ஆணி மாதம் வரையிலும் தேவர்களின் பகல் காலம் மற்றும் புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உத்தராயண புண்ணய காலத்தை வரவேற்பதே தை மாதம் முதல் நாள் கொண்டாடும் பொங்கல் திருவிழா

Next Story
கதிர் தொகுப்பு
Trending News