Kathir News
Begin typing your search above and press return to search.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் அத்தி மரம்!

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் அத்தி மரம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 April 2022 7:25 AM IST

அத்தி மரத்தின் பூப்பதை பார்ப்பது மிகவும் கடினம் என்றே சொல்லலாம். அதில் பால் முதல் பட்டை வரை அனைத்தும் பயன்தரக்கூடியது அத்தி மரம். அத்திமரத்தின் பால், பழம், பிஞ்சு, காய், பட்டை உட்பட அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற அத்திப்பழத்தை அன்றா பயன்பாடான உணவில் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டால் எவ்வித நோயும் நம்மை அண்டாது. இது போன்ற சிறப்பு மிக்க அத்தி மரத்தை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.


மர வகையில் சேர்ந்தது அத்தி மரம் ஆகும். இதில் பல்வேறு வகையிலான மரங்கள் உண்டு. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி உட்பட பல்வேறு வகையை கொண்டுள்ளது. இந்த மரம் சுமார் 10 மீட்டர் உயரம் வரையில் வளரும் தன்மை கொண்டது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் அதன் இலைகளில் 3 நரம்புகள் அமைந்துள்ளது. அத்திப்பழம் நல்ல மணமாக இருந்தும் அதனை உடைத்து பார்த்தால் உள்ளே சிறிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் இருப்பதை காணமுடியும். ஆனால் அதனை பதப்படுத்தாமல் சாப்பிட முடியாது என்று கூறலாம்.

அத்திப்பழத்தை பொறுத்தவரையில் புரதம், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் அத்திப்பழத்தில் 4 மடங்கு அதிகமான சத்துக்கள் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவு உள்ளது குறிப்பிடத்தக்கது. பதப்படுத்தப்பட்டுள்ள அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்து கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. உலர வைத்து பொடியாக்கிய அத்தி மர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வருகின்ற நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் வல்லமை கொண்டது.


மேலும், காயம் ஏற்பட்டு வடியும் ரத்தப்போக்கையும் இதனை வைத்து நிறுத்த முடியும். இப்பொடியில் செய்த கலவையை வைத்து நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களை கழுவி வந்தால் குணமாகிவிடும். அதே போன்று இதன் இலைகளை கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் ஆறிவிடும். ஈறுகளில் சீழ் வடிவதும் கட்டுப்படுத்தப்படும்.

மரத்திலேயே பழுத்து தானாக கீழே விழும் அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது தேனில் ஊறவைத்தும் பதப்படுத்தியும் சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும். சாப்பிட்ட உணவை விரைவில் ஜீரணிக்க செய்தும் பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது அத்திப்பழம் ஆகும். குறிப்பாக சக்கரை நோயால் ஏற்பட்டுள்ள பிளவு, கீழ்வாதம், மூட்டு வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு அத்திப்பால் வைத்து பத்து போட்டால் விரைவாக குணமாகிவிடும். இது போன்று ஏராளமான மருத்துவ பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

Source: Maalaimalar

Image Courtesy: Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News