Kathir News
Begin typing your search above and press return to search.

நல்ல கனவுகளை கண்டபின் இவற்றை செய்தால் நிச்சயம் பலிக்கும் என்கிறது மத்ஸ்ய புராணம்.!

நல்ல கனவுகளை கண்டபின் இவற்றை செய்தால் நிச்சயம் பலிக்கும் என்கிறது மத்ஸ்ய புராணம்.!

நல்ல கனவுகளை கண்டபின் இவற்றை செய்தால் நிச்சயம் பலிக்கும் என்கிறது மத்ஸ்ய புராணம்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  11 Dec 2020 5:45 AM GMT

கனவு என்பது நிறைவேறாத ஆசைகள் அல்லது நிறைவேற வேண்டும் என நம் ஆழ்மனதில் இருக்கும் ஆசைகள். இந்த கருத்தை வேதங்களும் சரி, விஞ்ஞானமும் சரி இரண்டுமே ஆதரிக்கிறது. ஒரு சில நேரங்களில் நமக்கிருக்கும் ஆசிகளின் காரணமாக, ஆன்மீக சாதனாக்களின் காரணமாக வருங்காலத்தில் நடக்க விருப்பதை உணர்த்தும் அறிகுறியாக கூட சில கனவுகள் அமைவதுண்டு.

ஒரு சில கனவுகள் நமக்கு ஏதோவொரு செய்தியை உணர்த்த நமக்கு கனவில் வருவதாக கனவு சாஸ்திர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெற்றி, செல்வம், ஆரோக்கியம், முக்கிய திருப்பு முனை மற்றும் ஏதேனும் தோஷங்களை நமக்கு அறிவுருத்த கனவுகள் வரலாம் என சொல்லப்படுகிறது. அது கனவுகளின் தன்மையை பொறுத்தது.

கனவுகள் குறித்த பல விஷயங்களை நாம் படித்து அறிந்திருப்போம். எவையெல்லாம் நல்ல அறிகுறி, எவையெல்லாம் தீய அறிகுறி என ஆழமாக இல்லாவிடினும் மேலோட்டமான பார்வை நமக்குண்டு. இதில் நாம் காண்கிற பெரும்பாலான கனவுகளை நம்மால் நினைவு கூற முடிவதில்லை. மிகவும் முயற்சித்தால் ஒரு சில காட்சிகளை கோர்வையின்றி நம்மால் நினைவு கூற முடியும். ஆனால் இதற்கு விதிவிலக்காக, ஒரு சில கனவுகள் மனதில் ஆணி அடித்தாற் போல் பதிந்திருக்கும் எல்லா நிகழ்வுகளையும், காட்சிகளையும் மனிதர்களையும் நம்மால் நினைவு கூற முடியும்.

எனவே, இந்த கனவுகள் தொடர்பாக மத்ஸ்ய புராணத்தில் சில முக்கிய குறிப்புகள் உண்டு. நினைவில் வைத்து கொள்ள கூடிய கனவுகளுக்கு நம் உடலில், உளவியலில், மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை உண்டு. எனவே ஒரு நல்ல கனவினை நாம் கண்டிருந்தால் மத்ஸ்ய புராணத்தின் அடிப்படையில் ஒருவர் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

நல்ல கனவிற்கு பின், அது குறித்த முழுமையான தகவல்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சொல்லப்படுகிறது. மாறாக, ஒரு நல்ல கனவினை கண்ட பின், உடனடியாக கணபதி மந்திரத்தை பாராயணம் செய்வது நல்ல பலனை தரும்.

மேலும் பிரம்ம மூஹூர்த்தத்தில் கண்ட நற்கனவுகள் பலிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதால், தொடர் தியான பயிற்சிகள் செய்து வருவது நமக்கான நன்மையை இது போன்ற உருவில் உணர்த்த ஏதுவாக இருக்கும்.

உறங்கிய பின், நம்முடைய உறக்கம் நிகழும் இரவை மூன்றாக பிரிக்கிறார்கள் இதல் முதல் பகுதி உறக்கத்தின் கனவுகள், ஒரு வருட காலத்திற்குள் நிகழலாம் எனவும், இரண்டாம் கட்ட உறக்கத்தின் கனவுகள் அடுத்த 6 மாத காலங்களில் நிகழலாம் என்றும், மூன்றாம் கட்ட உறக்கம் அதாவது அதிகாலை 4 முதல் 5 வரையிலான கனவுகள் அடுத்த 3 மாதங்களுக்குள் நிகழலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அடுத்து ஒரு நல்ல கனவினை கண்டவுடன் கண் விழிக்கிற போது உள்ளங்கையை பார்ப்பது அல்லது பெற்றோரின் பாதங்களை பார்ப்பது நன்மையை தரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News