Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக பயிற்சிகள் செய்வதில் தடைகள் வராமல் தவிர்க்க இந்த எளியமுறைகளை கடைப்பிடியுங்கள்..!

ஆன்மீக பயிற்சிகள் செய்வதில் தடைகள் வராமல் தவிர்க்க இந்த எளியமுறைகளை கடைப்பிடியுங்கள்..!

ஆன்மீக பயிற்சிகள் செய்வதில் தடைகள் வராமல் தவிர்க்க இந்த எளியமுறைகளை கடைப்பிடியுங்கள்..!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  20 Feb 2021 6:15 AM GMT

ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது ஆன்மீகம். நவீன வாழ்க்கையில் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழலில் இன்று பலரும் ஆன்மீகத்தை நோக்கி வர ஆரம்பித்து உள்ளனர். அந்தவகையில் ஆன்மீகத்தில் ஒருவர் ஏற்றமிகு பாதையில் செல்ல கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைக்கப்படும் பழக்கங்கள் சில:

ஆன்மீக சாதனாக்கள் செய்ய உகந்த நேரமாக காலை பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 மணி உகந்த நேரம் என சொல்லப்படுகிறது. குருமார்களின் வழிகாட்டுதலின்படி முறையாக கற்றுக் கொண்ட ஏதோ ஒரு ஆசனம், உதாரணமாக பத்மாசனம் சித்தாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது நல்லது. கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து தியானம் செய்வது மிகவும் நன்மை தரும். தினசரி 20 சுற்று பிராணாயாமம் சுவாசத்தை புத்துணர்வாக வைத்திருக்கும்.

தீட்சை பெற்று இருக்கும் மந்திரங்கள் ஏதும் இருப்பின் அதை பரிந்துரைக்கப்பட்ட முறையில் அல்லது 108 முறை சொல்வது நல்ல பலன்களை அளிக்கும்.

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் சாத்வீக உணவை உட்கொள்வது நல்லது. மற்றும் தியானத்திற்கு என்று பிரத்தியேக அறை அல்லது இடம் ஒதுக்கி தினசரி அங்கேயே தியானத்தை செய்து வருவதால் அந்த இடத்தில் ஆற்றல் மற்றும் ஆரா மிகவும் வலுவாக இருக்கும். வாசிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் புராணங்களில் இருக்கும் கீதை ராமாயணம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

உங்களுக்குப் பிடித்தமான குருமார்களின் அல்லது ஆன்மீக அறிஞர்களின் சத்சங்கங்கள் கேட்பது நல்ல மன தெளிவையும் நமக்கு வழங்கும். ஏகாதசிகளில் விரதம் இருப்பது ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ஒருநாளில் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மௌன விரதம் இருப்பது நமக்கு நாம் திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். ஆன்மீகப் பாதையில் உச்சம் தொடுவதற்கு சொல்கின்ற வார்த்தைகள் உண்மையானதாக இருக்கவேண்டும். மிக மென்மையாக பேசுங்கள் ஒருபோதும் உங்கள் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் போது மற்றவர்களை காயப்படுத்தாதீர்கள். பொருள் தன்மையிலான ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்பு இல்லாத வாழ்வு தேவையற்ற துன்பங்களிலிருந்து நம்மை விலக்கி வைத்திருக்கும். மிகவும் வலிமை வாய்ந்த உணர்வுகள் ஆன காமம் குரோதம் கோபம் போன்றவற்றில் இருந்து விடுபட்டு இருங்கள். பிறரை சார்ந்து வாழாமல் சுயமாக வாழும் வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யுங்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News