ஆயுர்வேதத்தின் கடவுள் "தன்வந்திரி பகவான்" பகிர்ந்த நான்கு ஆரோக்கிய ரகசியங்கள்.!
ஆயுர்வேதத்தின் கடவுள் "தன்வந்திரி பகவான்" பகிர்ந்த நான்கு ஆரோக்கிய ரகசியங்கள்.!
By : Thoorigai Kanaga
பிரபஞ்ச இயக்கம் துவங்கி, வானியல் சாஸ்திரம், நோய்கள் அதற்கான மருத்துவ முறைகள் என பேசப்படாத விஷயங்களே நம் இந்து புராணத்தில் இல்லை. அந்த வகையில் ஆரோக்கியம் குறித்து நம் புராணங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
தேவர்களை காக்க பாற்கடலை கடைந்த போது, மஹா விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி சமுத்திரத்திலிருந்து அமிர்தத்துடன் தோன்றிய வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே. அவர் அமிர்த்தை கொண்டு வந்தார் என்பதை தாண்டி, தன்வந்திரி ஆயுர்வேதத்தின் கடவுள். விஷ்ணு தர்மோத்ரா புராணம் என்பது விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் பகவான் தன்வந்திரி ஆயுர்வேதம் குறித்த ஞானத்தை அரசர் திவோதாசருடன் பகிர்ந்து கொண்டார். இவர் வாரணாசியின் அரசர்.
இவர் பின்னாளில், வனவாசம் மேற்கொண்டு தான் கடந்த மனிதர்களில் தனக்கு சீடராக ஏற்புடையவர்களை தேர்வு செய்து, நோய்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பகவான் தன்வந்திரியிடம்ம் பெற்ற ஞானத்தை பகிர்ந்து வந்தார்.
மகா துறவி விஸ்வாமித்ரரின் புதல்வரான சுஸ்ருதா இவருடைய சீடரே. பகவான் தன்வந்திரியின் தத்துவத்தின் படி மனிதகுலத்திற்கு வரும் பெரும்பாலான நோய்கள் மனிதர்களின் தவறான உணவு பழக்கத்தால் உண்டானதே. எப்போது மனிதன், இயற்கையிடமிருந்து விலகி செயற்கை வழி உணவை உட்கொள்ள தொடங்குகிறானோ அப்போது அது நோய்க்கு வழிவகுக்கிறது.
விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள் இங்கே.
புராணத்தின் படி, ஒரு மனிதனுக்கு நேர்கிற நோய்களில் கிட்டதட்ட 160 விதமான நோய்கள் இறைச்சியை உட்கொள்வதாலே வருகிறது. உட்கொள்ளப்படும் உயிரினத்திடமிருந்து பரவக்கூடிய நோய்களாக அவை இருக்கின்றன.
அடுத்து, உணவு உட்கொண்ட உடனே நீர் அருந்துவது மிக தவறாகும். இவ்வாறு அருந்துவது, 103 நோய்களுக்கு வழிவகுக்கும், இதில் இதய கோளாறு, மலசிக்கல், மைக்ரைன் போன்றவை அடங்கும். எனவே உணவுக்கு பின் நீர் அருந்த குறைந்தது ஒரு மணி நேரம் இடைவெளி எடுத்து கொள்ள வேண்டும்.
உண்மையில் தேநீர் என்பது, சுடும் நீரில் தேயிலைகளை போட்டு கொதிக்க வைப்பது, பாலில் தேநீர் கலப்பதை ஆயுர்வேதம் பரிந்துரைப்பதில்லை. எனவே இன்றைய நவீன காலத்து தேநீரினால் குறைந்தது 80 வகையான நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு.
அடுத்து உணவுக்காக பயன்படுத்தப்படும் உலோகங்கள். முந்தைய காலத்தில் உணவு என்பது மரத்தினாலும் பின் மண் பாண்டத்தினாலும் சமைக்கப்பட்டது. எப்போது உணவு பொருட்களை பலவிதமான உலோகங்களில் சமைக்க தொடங்கினோமோ அப்போது பல வித நோய்களும் நம்மை சூழ தொடங்கின. விஷ்ணு தமோத்தர புராணத்தின் படி கிட்டத்தட்ட 48 நோய்கள் உணவுடன் தொடர்புடைய உலோகங்கள் மூலம் வர வாய்ப்புகள் உண்டு.