Kathir News
Begin typing your search above and press return to search.

10008 ருத்ராட்சங்களால் தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பத்தாயிரத்தி எட்டு ருத்ராட்சங்களால் விநாயகப் பெருமானை தில்லை நடராஜர் வடிவில் வடிவமைத்துள்ளனர்.

10008 ருத்ராட்சங்களால் தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை!

KarthigaBy : Karthiga

  |  13 Sep 2023 5:15 PM GMT

முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பலவண்ணங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்ட செய்து அருகம்புல் , கொழுக்கட்டை, மோதகம், அவல் பொறி கடலை , பழங்கள் படைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் பூஜை முடிந்ததும் 3 , 5, 7 அல்லது 10வது நாளில் வீடுகளில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை எடுத்து வந்து பொது இடத்தில் வைத்து பூஜை செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ராதாநல்லூரில் 10,008 ருத்ராட்சங்களைக் கொண்டு தில்லை நடராஜர் வடிவில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பிரத்யேகமாக அயோதியிலிருந்து மொத்தமாக ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய உணவுகளைக் கொண்டு தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றிய பத்தடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News