Kathir News
Begin typing your search above and press return to search.

நாகதோஷத்தை நீக்கி சிறப்பான வாழ்வளிக்கும் கருட பஞ்சமி விரதம்

நாக தோஷம் நீங்கி சிறப்பான திருமணம் நடைபெறவும் கருடனை போன்ற பலமும் புத்தியும் உடைய குழந்தைகள் பிறக்கவும் கடைபிடிக்க வேண்டிய விரதம் கருட பஞ்சமி விரதம் ஆகும்.

நாகதோஷத்தை நீக்கி சிறப்பான வாழ்வளிக்கும் கருட பஞ்சமி விரதம்

KarthigaBy : Karthiga

  |  21 Feb 2023 10:00 AM GMT

ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும். கருடனை நினைத்து திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் கருடனைப் போல புத்திமானாகவும், வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள். நாக தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்களுக்கு நாக தோஷம் நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும்.


மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் என்ற பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் கருட பகவான் கச்யப்பர், விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.


கருடன், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News