தில்லையின் எல்லைக்குச் சென்று அமர்ந்த காளி தேவி- காரணம் என்ன?
தில்லையின் எல்லையில் காளி தேவி சென்று அமர்ந்த வரலாறு ஒரு சுவாரஸ்யமான கதையாக கூறப்படுகிறது.
By : Karthiga
சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்குளிர கண்டு மகிழ வேண்டும் என்று வியாக்கிர பாதர் முனிவரும் வரும் பதஞ்சலி முழுவதும் சிவபெருமானை வேண்டினர். அவர்களுக்கு இறைவன் ஆனந்த தாண்டவம் புரிந்து காட்சி தந்தார். அதே நேரத்தில் சிவபெருமானின் அருளுக்காக தவம் இருந்த தில்லை காளிக்கு தன்னைப் பொருட்படுத்தாமல் தன்னடியார்களின் பூஜையை பெரிதாக எண்ணி அவர்களுக்கு காட்சி கொடுத்த ஈசன் மீது கோபம் உண்டானது. இதனால் அவர் தில்லை வனத்தில் வாழ்ந்த முனிவர்கள் தேவர்களின் தியாகங்களை அழித்தாள்.
பின்ன சிவபெருமானை தன்னுடன் நடன போட்டிக்கு அழைத்தாள். அதை ஏற்றுக் கொண்ட ஈசன் போட்டி என்று வந்து விட்டால் அதற்கு ஒரு நிபந்தனை வேண்டுமே! என்ற அதற்கு காளி இந்த போட்டியில் நான் தோற்று விட்டால் தில்லையின் எல்லைக்கு சென்று விடுகிறேன் என்றார். இதை ஏற்று ஆடவல்லானும் காளி தேவியும் ஆடத் தொடங்கினர். இந்த நடனத்தை கண்ட முனிவர்களும் தேவர்களும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாத நிலையில் அவர்களின் சிவதாண்டவம் தொடர்ந்து நடந்தது.
நடன இறுதியில் பெருமான் தமது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழுமாறு செய்து பின்னர் அதனை தன் காலினால் எடுத்து காது வரை உயர்த்தி காலினாலேயே அணிந்து கொண்டார் .காலை காதுவரை உயர்த்திய கோலத்தை 'ஊர்த்துவ தாண்டவம்' என்கிறார்கள். ஆனால் காளி தேவியோ ஊர்த்துவ தாண்டவம் ஆடுவதற்கு முன்பு ஞானமுற்று தோல்வியை தழுவினார். இதனால் மேலும் கோபம் கொண்ட தில்லை காளி தில்லை நிலைக்குச் சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தார்.
அதை கண்ட சிவபெருமான் காளியிடம் சென்று அரக்கர்களின் அழிவுக்கே உன்னை உருவாக்கினேன். அரக்கர்கள் அழிந்து விட்டனர். நீ உன் சாபம் நீங்க பெற்று சிவகாமி எனும் நாமத்துடன் வருவாயாக என்றார். அதற்கு காலில் இறைவா அரக்கர்கள் அழிந்து விட்டார்கள். ஆனால் அகம்பாவம் ஆணவம் இன்னும் அழியவில்லையே என்றாள் காளி.உன் கோபம் நியாயமானது . நீ இந்த எல்லைக்கு வந்து விட்டதால் உன் பெருமை குன்றாது.
தில்லையில் இருக்கும் என்னை வணங்க வரும் பக்தர்கள் எல்லையில் உள்ள உன்னையும் வந்து வணங்கினால் தான் முழு பலனும் கிடைக்கும் .அந்த வகையில் உனக்குள் நானே இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள் என்றார் ஈசன். அப்போது பிரம்மதேவன் நான்கு வேதங்களாலும் அம்பிகையை துதித்து சாந்தமடையும் படி வேண்டினார். இதனால் சினம் தணிந்த காளிதேவி வேதத்திற்கு ஒருமுகமாக நான்கு முகங்களுடன் மேற்கு நோக்கி தில்லை அம்மன், பிரம்மசாமுண்டீஸ்வரி எனும் திருப்பெயருடன் எழுந்தருளினார.பிறகு சிவகாமியாக இறைவனுடன் இணைந்து காளியின் சாபம் நீங்க பெற்றார்.