Kathir News
Begin typing your search above and press return to search.

குபேரரின் அருளை பெறுவது எப்படி ?

குபேரரின் அருளை பெறுவது எப்படி ?

DhivakarBy : Dhivakar

  |  18 Nov 2021 12:30 AM GMT

செல்வத்தை காத்தருள்பவர் குபெரர். கடவுளால் இந்த உலகில் உருவாக்கப்பட்ட அனைத்து செல்வத்தையும் காத்தருள்பவர் இவரே. குபேரருக்கு இந்த சிறப்பு ஆதியிலேயே இருக்கவில்லை. தான் அனைவராலும் மதிக்கவும் போற்றப்பட வேண்டும் என்கிற சங்கல்பத்தோடு அவர் சிவபெருமானை எண்ணி தவம் மேற்கொண்டார். அவருடைய தவத்தின் பலனாய் இந்த நிலையை அடைந்தார் என சில புராணங்கள் சொல்கின்றன.

குபேரரின் பரிபூரண அருளை பெற்ற ஒருவரின் செல்வம் பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் குபேரரின் அருளை பெறுவது எப்படி. குபேர மந்திரம் சொல்லி, குபேர பூஜையை செய்வதால் அவருடைய அருளை பெறலாம்.

ஓம் ஶ்ரீம், ஓம் ஹ்ரீம், ஶ்ரீம், ஓம் ஶ்ரீம் க்லீம் விட்டேஸ்வாராய நமஹ என்பது குபேர மந்திரங்களுள் ஒன்று. அனைத்து வளங்களையும் அருளி, பொருள், புகழ் அனைத்தையும் அருளி பிரச்சனைகளை அழிக்கும் குபேர கடவுளை பணிந்து வணங்குகிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள். பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபட விரும்புவர்கள் குபேர மந்திரத்தை பாராயணம் செய்யலாம். யாரொருவர் தன்னுடைய மந்திரத்தை உண்மையான பக்தியான சொல்கிறார்களோ அவர்களின் துயரங்களை தீர்க்கிறார் குபேரர். இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதை விடவும், குபேர யந்திரத்தை வைத்து பூஜை செய்தவாறு சொல்வது மிகுந்த பலனை தரும்.

செம்பால் ஆன குபேர யந்திரம் பல அளவுகளில் கிடைக்கிறது. சரியான இடத்தில் யந்திரங்களை பெற்று அதன் நான்கு மூலைகளிலும் குங்குமம், சந்தனம், போன்ற புனித பொருட்களை பூசி, சிறிது அட்சதை பூ போன்றவைகளை அந்த யந்திரத்தின் மீது வைத்து பூஜைகளை செய்யத் துவங்கலாம் .

முறையாக பூஜைகள் செய்து, 108 முறை குபேர மந்திரத்தை 21 நாட்கள் சொல்லி வருவதால் நினைத்த பலனை பெற முடியும். இந்த மந்திரத்தை உச்சாடணம் செய்கிற போது, இந்த மந்திரத்தை உச்சரிப்பவர் மனதளவில், உடளவில் தூய்மையாக இருத்தல் அவசியம். மேலும் குபேர பூஜையால் ஒருவர் செல்வத்தை பெறுகிற போது அதுகுறித்த அகங்காகரமோ அல்லது ஆணவமோ இருத்தல் கூடாது. இது அந்த செல்வத்தின் ஆயுட்காலத்தை குறைத்து விடும்.

பொய், பொறாமை மற்றும் எதிர்மறையான எண்ணங்களை விலக்கி முழு மனதுடன் நல்ல நோக்கத்துடன் ஒருவர் குபேரரை வணங்கினால் அவர் சகல விதமான பொருளாதார பிரச்சனைகளையும் குறிப்பாக கடன் தொல்லைகளையும் தீர்ப்பார்.

Image : Krishna Images

Next Story
கதிர் தொகுப்பு
Trending News