ரூ.1800 கோடியில் திருப்பதிக்கு நிகராக உருவாகும் தெலுங்கானா கோவில்!
₹. 1800 கோடியில் 1400 ஏக்கர் பரப்பளவில் திருப்பதிக்கு நிகராக உருவாகியிருக்கும் தெலுங்கானாவின் கோவில்.
By : Bharathi Latha
இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையை இதுவரை திருப்பதி கோவில் தான் பெற்று வந்தது. இவற்றை மூடிய முறியடிக்கும் விதமாக தற்பொழுது தெலுங்கானாவில் திருப்பதிக்கு நிகராக கோவிலை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்தியாவின் பணக்கார கோவிலான திருப்பதி கோவிலுக்கு நிகராக ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள யாதகிரிகுட்டாவின் அழகிய மலைகளில் உள்ள பகவான் லட்சுமி நரசிம்ம சுவாமியின் பழங்கால குகைக் கோவிலை மாற்றத் தீர்மானித்து அறிவித்தார்.
2016 ஆம் ஆண்டு யாதகிரிகுட்டா மேம்பாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து அதற்கு ரூ.1800 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்து கோவிலை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்தார். இந்த பணிகளுக்கு முன்னதாக இந்து கோவில் சிறிய குகை கோயிலாக கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது இந்த குன்றை சுற்றியுள்ள பசுமையான காடுகள் நிறைந்த 8 மலைகள் உட்பட 1400 ஏக்கர் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள திருப்பதி கோவிலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரமாண்ட முறையில் பணிகள் தொடங்கின. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வைஷ்ணவ ஆலய ஆகம விதிகளின்படி புதிய கோவில் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமானத்துக்கு செங்கல், சிமெண்ட் போன்றவை இல்லாமல் அதற்கு பதிலாக தெலங்கானா பகுதியின் காகதீய கட்டிடக்கலையின்படி, க்ரிஷ்ணசீலா எனப்படும் கிரானைட் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டு வருகிறது. தெலங்கானா இந்தக் கற்கள் கொண்டு கட்டுவதற்குக் காரணம், இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் இயற்கை சீற்றங்கள் எது வந்தாலும், இந்த கட்டிடக்கலையால் கோவில் பாதுகாக்கப்படும். இதற்காக நூற்றுக்கணக்கான சிற்பிகள் மற்றும் கைவினைஞர்கள் கோவிலில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. வருகின்ற மே மாதத்தில் இதனுடைய பணிகள் நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Your Story