Kathir News
Begin typing your search above and press return to search.

தியானம் வாழ்க்கைக்குப் பயனளிப்பது எப்படி?

தியானம் செய்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றது.மூளைச் செயல்பாடு அதிகரிக்கிறது.

தியானம் வாழ்க்கைக்குப் பயனளிப்பது எப்படி?
X

KarthigaBy : Karthiga

  |  3 Aug 2022 5:15 PM IST

தியானம் வாழ்க்கைக்கு பயன் அளிக்கும் என்று பழைய தலைமுறை நமக்கு கற்பித்திருக்கிறது.

சாந்தமாய் இருந்து ஒரே சிந்தனையுடன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் குடிகொள்ளும் ஜீவசக்தி இறைவன் அருளும் சக்தி என்று மனதில் கொண்டுள்ள ஆராதனையே தியானம்.

யுகங்கள் கழியும்போது நிகழவிருக்கும் மனதின் சுத்திகரிப்பு இந்த ஜென்மத்திலேயே பரிணமிக்கும் சாதனை என்று தியானத்தை சிறப்பிக்கலாம்.

தியானத்தின் பயன்களை நவீன அறிவியல் அங்கீகரித்துள்ளது. மனதுக்கும் புத்திக்கும் சக்தி பெற ஒரே ஒரு பாதி மட்டுமே நவீன விஞ்ஞானம் உபதேசிக்கின்றது.

அது தியானத்தின் பாதை.மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு தனிப்பட்ட புள்ளியில் மையப்படுத்திய தியானம் செய்தால் மனதை தடுமாறச் செய்யும் சிந்தனைகளில் இருந்தும் விடுதலை பெறலாம்.

மூளையில் உள்ள பீட்டா அலைகள் ஆல்ஃபா, காமா ,டெல்டா என்ற அலைகளாக மாறுதல் அடைகின்றன என்று அறிவியல் கற்பிக்கின்றது.

இவ்வலைகள் மூளையை அனேகம் மடங்கு விருத்தியடைந்து செயல்படச் செய்யும் என்பது ஆராய்ச்சி வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மருத்துவ நூல்களில் அதற்கு தகுந்த இடம் அளித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News