Kathir News
Begin typing your search above and press return to search.

பண விரயத்தை தவிர்க்க விளக்கு பரிகாரம் செய்வது எப்படி?

பண விரயத்தை தவிர்க்க விளக்கு பரிகாரம் செய்வது எப்படி?

G PradeepBy : G Pradeep

  |  7 April 2021 12:16 AM GMT

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்க்கே உரிய ஒரு வழக்கமாகும். விளக்கு மங்களத்தை குறிக்கும். வீட்டில் எரியும் தீப ஒளிச்சுடர் மிகப்பெரிய ஆகர்சனத்தை வீட்டிற்கு அளிக்கும். விளக்கின் தன்மை அது நோக்கியுள்ள திசை விளக்கு எரியும் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு பல்வேறு விதமான இரையாற்றல்களை இந்த அகல் விளக்கு கிரஹித்து கொள்ளும் வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பதால் சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை, குறிப்பாக பண வரவிற்கு பிரத்யேகமாக விளக்கு வழிபாடு உள்ளது, இத வழிபாட்டை தொடர்ந்து செய்தால் பணவரவில் உள்ள தடைகள் நீங்கி தடையற்ற பணவரவு உண்டாகும்.




ஒவ்வொரு திசைக்கும் ஒரு தேவதை உண்டு. கிழக்கு திசைக்கு இந்திரன் அதிபதி கிழக்கில் விளக்கு ஏற்றினால் இந்திரனை போல வாழலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. மேற்கு திசை அதிபதி வருணன். வடக்கு திசை அதிபதி குபேரன். 6 மணிக்கு மேல் விளக்கு ஏற்றும்போது கிழக்கு பக்கம் பார்த்த ஒரு விளக்கையும் மேற்கு பக்கம் பார்த்த ஒரு விளக்கும் வடக்கு பார்த்த ஒரு விளக்கும் ஒரே நேர்கோட்டில் ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த விளக்கில் ஏற்றும் ஜோதியானது மூன்று திசைகளை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது நடுவில் இருக்கும் விளக்கு கிழக்கு திசை பார்த்தும் அதற்க்கு இடது புறம் மேற்கு திசை பார்த்த விளக்கும் அதர்க்கு வலது புறம் வடக்கு திசை பார்த்த விளக்கம் இருக்க வேண்டும். மேற்கு திசை பார்த்த விளக்கு யோகத்தை தரும் வடக்கு திசை பார்த்த விளக்கு செல்வதை தரும்



தினம்தோறும் இந்த மூன்று திசையிலும் விளக்கு ஏற்றுவதால் எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்கும் உறுதி அதிர்ஷ்டம் நமக்கு வரும். இந்த தீபத்தை ஏற்றும்போது மனதார நமக்கு எல்லா விதத்திலும் நன்மைகள் நடக்க வேண்டும் பணவரவு தடையின்றி வரவவேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக்கொண்டு ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அகல் விளக்கில் ஏற்றலாம் அல்லது ஒரு முகம் கொண்ட விளக்காக இருந்தாலும் அதில் ஏற்றி வைக்கலாம். தொடர்ச்சியாக 21 நாட்கள் அல்லது 42 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால்பணம் சம்பந்தமான தடைகள் நிரந்தரமாக நீங்கும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News