Kathir News
Begin typing your search above and press return to search.

தீயசக்திகளிடம் இருந்து நம்மை காக்கும் சுதர்ஷன ஹோமம் செய்வதெப்படி?

தீயசக்திகளிடம் இருந்து நம்மை காக்கும் சுதர்ஷன ஹோமம் செய்வதெப்படி?

தீயசக்திகளிடம் இருந்து நம்மை காக்கும் சுதர்ஷன ஹோமம் செய்வதெப்படி?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  2 Feb 2021 5:30 AM GMT

ஹோமங்களிலே மிகவும் பிரபலமானது சுதர்ஷன ஹோமம். இந்த ஹோமத்தை கண் திருஷ்டியிலிருந்து விடுபட, எதிர்மறைத் தன்மைகளிடமிருந்து விடுபட, தீய சக்திகளிடம் இருந்து காத்து கொள்ள, நாம் நினைத்த காரியங்களில் வெற்றி பெற இந்த ஹோமத்தை செய்வது வழக்கம்.

மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் மஹா விஷ்ணுவின் தெய்வீக ஆயுதமாக கருதப்படுவது சுதர்ஷண சக்ரமாகமும். தன் கரங்களில் சுதர்ஷன சக்ரத்தை மகா விஷ்ணு ஏந்தியிருப்பதனை நம்மால் காண முடியும். இது வெற்றியின் ஆயுதமாகும். தீமையை தாங்கி வரும் பெரும் சேனையையும், பெரும் படைகளையும் தகர்க்க வல்லது. எதிரிகளை திசைத்தெரியாமல் அழிக்கக்கூடியது.

எனவே சுதர்ஷன சக்ரத்தின் அம்சமாக விளங்கக்கூடிய அந்த வெற்றியின் தன்மை சுதர்ஷன ஹோமத்தை செய்கிற போது கிடைக்கிறது. இந்த ஹோமத்தை ஏகாதேசி, துவாதசி மற்றும் பெளர்ணமி ஆகிய நாட்களில் செய்யலாம்.

இந்த ஹோமத்தை சுதர்ஷன மந்திர ஜபத்துடன் துவங்குகிறார்கள். அதாவது சுதர்ஷன அஸ்டோத்தரத்தை ஜபித்தபடி இந்த ஹோமமானது நடைபெறும். இந்த ஹோமத்தின் இடையே, இந்த ஹோமத்தை எதுக்கு செய்கிறோம் என்கிற சங்கல்பத்தை நினைவு கூறுவது உசிதமானது ஆகும். பின் அனைத்து தேவர்க்களுக்கும், தேவி மஹாலட்சுமிக்கும், தெய்வங்களுக்கும் ஆராதனை நிகழ்கிறது. பலவிதமான ஆஹூதிகளும் இந்த ஹோமத்தில் தரப்படுகின்றன.

இந்த ஹோமத்தை நடத்துவதற்கு சுதர்ஷன எந்திரம், பல அரிய மூலிகைகள், போன்ற பல மகத்துவம் நிறைந்த பொருட்கள் இந்த ஹோமத்தில் பயன்படுத்தப்படுகிறது. அங்கே கொழுந்து விட்டு எரிகிற ஹோம கனலில் மந்திரங்கள் முழங்க ஒன்றன் பின் ஒன்றாக அரிய வகையான தூப பொருட்கள், நெய்வேத்யங்கள், பிரசாதங்கள் போன்றதெய்வீக பொருட்கள் அனைத்தும் இடப்படும்.

எனில் இந்த ஹோமத்தை எல்லோராலும் செய்துவிட இயலாது. இதனை முழுமையாக அறிந்தவர்களால் மட்டுமே முழுமையாக செய்ய முடியும். சுதர்ஷன ஹோமம் என்பது மனிதகளின் நல்வாழ்விற்காக சாஸ்திரங்கள் நமக்களித்த கொடை. இதனை குறித்த முழுமையான ஞானம் இன்றி செய்பவர்களே இதன் பலன் கிடைக்காமல் தடுமாறுவார்கள்.

ஒருவர் முறையாக அறிந்த பண்டிதர்களை கொண்டு சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின் படி இந்த ஹோமத்தை செய்வார்கள் எனில் நிச்சயம் அதற்கான பலன்ன் அவர்களுக்கு கிடைத்தே தீரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News