Kathir News
Begin typing your search above and press return to search.

நற்பலன்களுக்கு சிவபெருமானை வழிபடுவது எப்படி? சிவபுராணம் காட்டும் வழிமுறைகள்

நற்பலன்களுக்கு சிவபெருமானை வழிபடுவது எப்படி? சிவபுராணம் காட்டும் வழிமுறைகள்
X

G PradeepBy : G Pradeep

  |  24 April 2021 11:45 PM GMT

சிவலிங்கத்தை வீட்டிலோ அல்லது வழக்கமான வழிபாடுதல் அற்ற இடத்திலோ வைக்ககூடாது என அறிவுருத்தப்படுகிறது. தேவையான சடங்குகளை பின்பற்றாமல் சிவலிங்கம் வைக்கப்படுவது தெய்வத்தை அவமதிக்கும் செயலாக இந்திய மரபில் கண்டிக்கப்படுகிறது.

சர்வேஸ்வரரான சிவபெருமான் மிக எளிமையான வாழ்வை வாழ்பவராகவே அடையாளப்படுத்தப்படுகிறார். எனவே அவர் எளிமையான வகையில் போற்றப்படுவதையே விரும்புபவராக இருக்கிறார். மிக உயர்ந்த கனிகளோ, ஆடம்பர உணவோ அல்லது அலங்கார உடைகளோ அவரை வழிபடுவதற்கு தேவையாய் இல்லை





சிவபெருமானை மனம் குளிரச்செய்ய வில்வ இலைகள், சுத்தமான பசும் பால், சந்தனம், விபுதி ஆகியவை கொண்டு வழிபடலாம் என நம் பண்டைய புராணங்கள் சொல்கின்றன. சிவபெருமானை உளமாற வழிபடுவதின் மூலம் சர்வ லோகத்திலும் உள்ள அனைத்து தெய்வங்களையும் மனம் கனியச்செய்யலாம் என்ற தாத்பரியம் இந்து மதத்தில் நிலவுகிறது.

சிவபெருமானை மற்றும் அவருடைய ஒரு பாகமான உமையாள் பார்வதி தேவியையும் மையமாக வைத்து பேசப்படும் சிவபுராணத்தின் ஒரு பகுதியில் சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும், அவரை வழிபடும் வேளையில் எவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



இதில் குறிப்பாக சிவலிங்கத்தை ஏன் மஞ்சளால் அபிஷேகம் செய்யக்கூடாது என்கிற காரணம் பேசபடுகிறது.

இந்து மதத்தில் மிக புனிதமான அம்சமாக மஞ்சள் கருதப்பட்டாலும், அது அனைத்து கடவுள் மற்றும் தெய்வங்களுக்கு அர்பணிக்கபட்டாலும் கூட இந்து மரபில் சிவனுக்கோ அல்லது சிவலிங்கத்திற்கோ மஞ்சள் அர்பணிக்கப்படுவதில்லை.

புராணங்களின் படி சிவலிங்கம் என்பது ஆண் உயிராற்றலின் குறியீடு. பேராற்றலை வெளிப்படுத்தும் அம்சமாக சிவலிங்கம் கருதப்படுவதால் குளிர்ந்த தன்மையுடைய பொருட்களான பால், சந்தனம் போன்ற அம்சங்களே சிவபெருமானுக்கு அர்பணிக்கப்படுகின்றன.

உலக இன்பங்களிலிருந்து விடுபட்ட சிவபெருமான் பெரும்பாலும் மஞ்சளால் வணங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் இதுவே.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News