Kathir News
Begin typing your search above and press return to search.

மனிதர்கள் விரதம் இருப்போம் ஆனால் இந்த ஊரில் அம்பாளே விரதம் இருக்கிறாள் - 'பச்சைப் பட்டினி விரதம்'!

சமயபுரம் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் என்ற விரதம் இருப்பதாக ஐதீகம்.

மனிதர்கள் விரதம் இருப்போம் ஆனால் இந்த ஊரில் அம்பாளே விரதம் இருக்கிறாள் - பச்சைப் பட்டினி விரதம்!
X

KarthigaBy : Karthiga

  |  14 March 2023 9:45 PM IST

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் 'பச்சை பட்டினி விரதம் ' என்பது சிறப்புக்குரியது.உலக நன்மைக்காக இத்தல மாரியம்மன் இந்த விரதத்தை மேற்கொள்வதாக ஐதீகம் .இந்த விரதம் 28 நாட்கள் நீண்டது .

இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியமாக படைக்கப்படாது .அதற்கு பதிலாக துள்ளுமாவு, திராட்சை , இளநீர் , பானகம், ஆரஞ்சு பழம் போன்றவை அம்மனுக்கு நெய்வேதியமாக படைக்கப்படும். அம்மனின் 'பச்சைப்பட்டினி விரதம்' இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் .இதனை பூச்சொரிதல் என்பார்கள்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News