Kathir News
Begin typing your search above and press return to search.

இவையெல்லாம் நிகழ்ந்தால் பண விரயத்தின் அறிகுறியாக இருக்கலாம்.!

இவையெல்லாம் நிகழ்ந்தால் பண விரயத்தின் அறிகுறியாக இருக்கலாம்.!

இவையெல்லாம் நிகழ்ந்தால் பண விரயத்தின் அறிகுறியாக இருக்கலாம்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  19 Nov 2020 6:00 AM GMT

ஜோதிட சாஸ்திரத்தின் படி வாழ்வில் எது நிகழ்ந்தாலும் அது நமக்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணி தான். நல்ல நிமித்தம் அல்லது கெட்ட நிமித்தம் எதோவொன்றை நம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்தி கொண்டேயிருக்கின்றன.

பல விஷயங்கள் நமக்கு நல்ல அறிகுறிகளாக அமையும், சிலவை நமக்கு கெட்ட விஷயங்களாக அமையும். அதில் பண விரயத்தை குறிக்க கூடிய அறிகுறிகளாக பின்வருபவை சொல்லப்படுகின்றன.

உங்கள் வீடுகளில் உள்ள மின்சார வேலைபாடுகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு கொண்டேயிருந்தால் அது பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் வாழ்க்கை துணையுடன் வழக்கத்தை விடவும் அதிகமான நேரம் சண்டை பிடித்தால். அது பணவரவினை தடுக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

பெரும் வாய்ப்புகள் கிடைப்பது போன்ற சமிக்கைகள் நமக்கு தென்படும். அனைத்து வாய்ப்புகளும் கனிவது போன்ற சூழல் அமைந்தாலும் கடைசி நேரத்தில் தவர்ந்து போகும் நிகழ்வுகள் நடக்கும். வயிறு சம்மந்தமான பிரச்சனை இதயம் தொடர்பான பிரச்சனை பண வரவு குறைவதற்கான நிமித்தங்களாக பார்க்கப்படுகிறது.

சில மேல்நாட்டு நம்பிக்கைகளின் படி, எப்போதும் விட அதிகப்படியான எச்சில் சுரத்தல் பண விரயத்தின் அறிகுறியாக அறியப்படுகிறது. செல்ல பிராணிகளின் மரணம், வீடுகளில் தண்ணீர் ஒழுகுதல் போன்றவை பண விரயத்தின் அறிகுறி. உங்கள் வீடுகளின் முகப்பில் எண்ணெய் சிந்தினால் சற்று பொருளாதாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்த. வாய்ப்புகள் கைகள் நழுவி போகலாம்.

அதை போலவே தங்க ஆபரணங்கள் தொலைந்தோ அல்லது திருடு போனாலோ உறவினர்கள் அல்லது நண்பர்களால் நீங்கள் வஞ்சிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

அறிகுறிகள் நம்பிக்கைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். இவையெல்லாம் வெறும் அறிகுறிகள் மட்டுமே. எவர் ஒருவர் நேர்மையான செயல்கள், அறம் சார்ந்த விஷயங்களை செய்கிறார்களோ அவர்களை எந்த நம்பிக்கையையும் எதுவும் செய்வதில்லை. இவற்றை ஒரு குறிப்புகளாக மனதில் வைத்து கொள்ளலாம்.

இவ்வாறு ஏதேனும் நடந்தால் முடங்கி சோர்ந்துவிடாமல், இதுவும் கடந்து போகும் என்கிற தன்னம்பிக்கையுடன் எழுவதே மனிதரின் பண்பு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News