கிருஷ்ணனுக்கு யமுனையெனில், விஷ்ணுவுக்கு காவேரி என்பதை உணர்த்தும் ஸ்ரீரங்கபட்டனா அதிசய தலம்.!
கிருஷ்ணனுக்கு யமுனையெனில், விஷ்ணுவுக்கு காவேரி என்பதை உணர்த்தும் ஸ்ரீரங்கபட்டனா அதிசய தலம்.!
By : Thoorigai Kanaga
கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற ஸ்தலம் ஸ்ரீரங்கபட்டணா . இந்த இடத்தில் உள்ள விஷ்ணு பெருமானை தரிசைக்கையில் அவர். ' பயப்படுவதால் எந்த பயனும் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் செல்லட்டும்' என்கிற செய்தியை சொல்வது போல உள்ளது அவருடைய சாய்வான தரிசன கோலம் என எழுதுகிறார் 'மோனா மேத்தா ' அவர்கள்.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த புராதன கோவில். மைசூர் நகரத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் கோவில். தீவு போன்ற இந்த கோவிலின் பல முக்கிய இடங்கள் யுனெஸ்க்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது . காவேரி ஆற்றிற்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள நகரம் இது. ஹோய்சால மற்றும் விஜயநகர ஆகிய இரு சாம்ராஜ்யங்கள் கட்டிட கலையை உருவாக்கிய கோவில் இது. இந்த கோவில் கங்கா சாம்ராஜ்யத்தால் உருவாக்கப்பட்டது என வரலாறு சொல்கிறது.
வைஷ்ணவர்களின் முக்கிய தலமாக விளங்விஷ்ணு அவதாரத்துடன் கும் இக்கோவிலையம் காவேரி ஆற்றையும் சுற்றி மூன்று முக்கிய ரங்கநாதா சுவாமி தலங்கள் உள்ளன அவற்றை இவ்வாறு அழைக்கிறார்கள். முதலில் ஆதி ரங்கா என்பது ஸ்ரீரங்கப்பட்டின பெருமாளையும். அடுத்து மத்திய ரங்கா என்பது சிவசமுத்திர என்னும் பகுதியில் உள்ள பெருமாள் தலத்தையும் , அந்திய ரங்கா என்பது ஸ்ரீரங்கத்தையும் குறிக்கிறது.
நதிகளில் காவேரியும், யமுனையும் விஷ்ணு அவதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. யமுனை கிருஷ்ணனுடன் மிகவும் நெருக்கமாக இருந்த நதி. காவேரி தென்னகத்தில் விஷ்ணு பெருமானுக்கு உகந்த நதி. அந்த வகையில் யமுனையை போலவே விஷ்ணுவுடன் நெருங்கியிருக்க வேண்டும் என்ற என்ற விருப்பத்தில் விஷ்ணுவை கடுமையாக பிரார்த்தனை செய்தார் காவேரி தாய். அதன் பலனாகவே,காவேரியின் மடியில் தரிசனம் தருகிறார் .
மிகவும் பிரமாண்டமாகவும், விசாலமாகவும் இருக்கும் இக்கோவிலில் ரங்கநாதருடன் ரங்கநாயகியும் அருள்பாலிக்கிறார். நரசிம்மர், கருடர், வேணுகோபால் ஆகிய கடவுளர்க்கும் இங்கே தனி தனியே கோவில் உண்டு. புராணங்களின் படி இந்த கோவில் முனிவர் கவுதமரால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின் வந்த அரசர்களும், மன்னர்களும் இக்கோவிலை மேலும் மேலும் விரிவாக்கினர். இதிலிருக்கும் ஆச்சரியம் என்னவெனில், சில இஸ்லாமிய மன்னர்கள் கூட இங்குள்ள பெருமாளின் அருளால் ஆட்கொள்ளப்பட்டு கோவிலுக்கு தேவையான நன்கொடைகளை வழங்கியிருப்பதாக வரலாறு கூறுகின்றது.
பக்தர்களுக்கு வேண்டிய அருளை வழங்கும் பெருமாள் என்பதாலாயே இந்த கோவிலில் எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது.