Kathir News
Begin typing your search above and press return to search.

கண் விழித்தவுடன் இவற்றை கண்டால் பணம் பெருகுவது உறுதி!

கண் விழித்தவுடன் இவற்றை கண்டால் பணம் பெருகுவது உறுதி!

கண் விழித்தவுடன் இவற்றை கண்டால் பணம் பெருகுவது உறுதி!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  21 Nov 2020 5:45 AM GMT

வெற்றிகரமான வாழ்விற்கு கடின உழைப்பு மட்டுமே மிக அவசியம். ஆனாலும் கூட அதிர்ஷ்டத்தின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் இல்லை. எத்தனை தூரம் கடினமாக உழைத்தாலும் சிறு சதவீத அதிர்ஷ்டமும், நல்ல நேரமும், நிச்சயம் ஒரு மனிதரை பெரும் சாதனையாளராக மாற்றும். இந்த நல்ல நேரம், அதிர்ஷ்டம் என்பது ஒருவரின் கர்ம வினைப்படி அமைவது.

உங்களுக்கு அந்த நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருக்கிறதா என்பதை ஜோதிடம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்ற போதும், ஒரு சில சமிக்கைகளின் மூலம் நிமித்தங்கள் நமக்கு அதனை உணர்த்தும்.

உதாரணமாக, நீங்கள் கண் விழித்து பார்க்கும் போது எதேர்சையாக தேங்காயோ அல்லது வெள்ளை நிற வாத்தையோ காண நேரிட்டால் உங்களை நோக்கி ஒரு நல்ல செய்தி வரயிருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் காகம் அமர்ந்திருந்தாலும் நல்ல விஷயம் நடக்கவிருக்கிறது என்று பொருள். உங்கள் கனவில் தங்க நிற அல்லது வெள்ளை நிற பாம்பை கண்டால் மிக நிச்சயமாக பணம் உங்கள் வழியில் வர இருக்கிறது என்று பொருள்.

நீங்கள் வியாபார நோக்கத்துடன் பயணம் செய்யும் பொழுது, உங்கள் பயணத்திற்கு வலது புறம் குரங்கு, நாய் அல்லது ஏதோவொரு பறவையை கண்டால் மிக நிச்சயமாக அந்த பயணம் நல்ல விதமாக அமையும் என்று பொருள். உங்கள் கனவில் பச்சை பசுமையான இடம் அதுவும் நீர்நிலையுடன் கூடிய இடமாக அவை இருக்குமாயின் அது மிக அதிக நற்பலன்களை தரும்.

நீங்கள் கண்விழித்து பார்க்கும் பொழுது வெள்ளை நிற பால்சார்ந்த பொருட்களை கண்டால் நீங்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடையப்போவது உறுதி. ஒரு அதிகாலை நீங்கள் புனித சங்கொலி கேட்டோ அல்லது பூஜைக்கான மணியின் சப்தம் கேட்டோ கண்விழித்தால் அன்றைய நாளில் தெய்வ அனுகூலம் நிறைந்திருக்கிறது என்று பொருள்

மேலும் நடைபாதையின் போது கரும்பை காண்பது, வானத்தில் வால் நட்சத்திரம் தென்படுவது நான்கு இலை கொண்ட கிராம்பை காண்பது இவை அனைத்தும் மிக விரைவில் அதிர்ஷ்டம் வரவிருக்கிறது என்பதற்கான அறிகுறி. இவையெல்லாம் அறிகுறிகள் மாத்திரமே. ஒருவரின் மனோபலமும், மனதின் பக்குவமும் எந்த சூழலையும் வெற்றிகரமாக மாற்றும் என்பதே நிதர்சனம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News