Kathir News
Begin typing your search above and press return to search.

பாம்பு கடிக்கு 48 நாட்கள் வழிபாடு செய்தால் பூரண குணமருளும் கருடன் கோவில்!

கேரள மாநிலத்தில் 48 நாட்கள் வழிபாடு செய்தால் பூரணமாக பாம்பு கடிக்கு குணம் தரக்கூடிய கருடன் ஆலயம் உள்ளது.

பாம்பு கடிக்கு 48 நாட்கள் வழிபாடு செய்தால் பூரண குணமருளும் கருடன் கோவில்!
X

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2023 3:07 AM GMT

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில் சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை 'கருடன் காவு' என்கின்றனர். பாம்பு கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூரணமான குணம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே அமர்த்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார் .


இதேபோன்று கருட பகவானுக்குரிய இன்னொரு அறிய ஆலயம் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கோலா தேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாக காட்சி தருகிறார். ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாக கூறப்படும் கோலாதேவி கருட சுவாமி ஆலயத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததாக கூறுகின்றனர். சீதா தேவியை ஸ்ரீ ராமலட்சுமணர் தேடிச்சென்ற போது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவை கண்டனர். இறந்த ஜடாய்வுக்கு ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்த கோலாதேவி என்று இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News