நம்ம பழனியில் ‘செல்பி எடுக்க குவியும் இளைஞர்கள்.!
நம்ம பழனியில் ‘செல்பி எடுக்க குவியும் இளைஞர்கள்.!
By : Kathir Webdesk
‘நமது சென்னை’ என்று சமீபத்தில் மெரினா கடற்கரை சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த லைட் போர்டு முன்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது பழனி முருகன் கோயிலிலும் ‘நமது பழனி’ என்று லைட் போர்ட் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் நம்ம பழனி முன்பாக செல்பி எடுத்த செல்கின்றனர்.
இந்த லைட் போர்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்பு எல்லாம் இளைஞர்கள் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். தற்போது நமது பழனி லைட் போர்டு முன்பாக செல்பி எடுத்து தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போன்ற மற்ற கோயில்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் விரிவுபடுத்தினால் அனைத்து சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.