Kathir News
Begin typing your search above and press return to search.

நோய் தொற்று காலத்தில் வாதம், கபம் பித்தத்திற்கு நம் பாரம்பரிய தீர்வுகள்

நோய் தொற்று காலத்தில் வாதம், கபம் பித்தத்திற்கு நம் பாரம்பரிய தீர்வுகள்

G PradeepBy : G Pradeep

  |  22 April 2021 12:15 AM GMT

இந்திய மருத்துவம் மனிதனுக்கு வரும் வியாதியை மூன்று விதமாக பிரிகிறது வாதம், பித்தம், கபம் ஆகியவை. இந்த மூன்றும் பஞ்சபூதங்களோடு தொடர்பு உடையவை. பூமியும் தண்ணீரும் சேர்ந்தது கபம். காற்றும் ஆகாயமும் சேர்ந்தது வாதம். நெருப்பு என்பது தான் பித்தம். இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு சம நிலையில் இருந்தால் அந்த மனிதன் ஆரோக்யமாக இருக்க முடியும். மனிதர்கள் மட்டுமல்ல பூமியில் உள்ள ஒவொரு உயிரினமுமே பூ,, காய்,பழம், மரம் செடி கொடி, உயிரினங்கள் என்று எல்லாவற்றிற்குள்ளும் இந்த ஐம்பூதங்களின் கலவை இருக்கும்,

இந்த வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் ஒவ்வொறு அளவில் இருக்கும். இந்த மூன்றிற்கும் உடலில் ஒவ்வொறு இடம் இருக்கும். அந்த குறிப்பிட்ட இடத்தில் அடைத்துக்கொண்டு உடலுக்கு நோய் தன்மையை ஏற்படுத்தி விடும். உதாரணமாக நாம் மூச்சு விட முடியாமல் போனால் கபம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும். இந்த கபம் உடலில் நெஞ்சு பகுதியை அடைத்து கொண்டு பிரச்சனையை ஏற்படும், முறையே வாதம் பித்தம் இரண்டிற்கும் இது போல பிரத்யேக இடம் உடலில் உண்டு.

இப்படி உடலுக்கு வரும் உபாதைகளை தோஷம் என்று சொல்லுவார்கள். ஒருவருக்கு உடலில் எந்த தோஷம் அதிகமாக இருக்கிறதோ அந்த தோஷத்திற்கேற்ற காலங்களில் அதன் விரீயம் அதிகமாகும். உதாரணமாக ஒருவருக்கு கபம் தான் உடலில் முக்கியமான தோஷம் என்றல் அவருக்கு டிசம்பர் மாதத்தில் அந்த தோஷத்தின் அளவு அதிகமாகும்.


ஒருவருடைய வயதிற்கேற்ப்ப இந்த வாதம் கபம் பித்தம் ஒருவரிடம் அதிகமாக காணப்படும். குழந்தையாக இருந்து வளரும் போது நீரும் நிலமும் சேர்ந்த கபம் அதிக அளவில் இருக்கும் ஏனென்றால் அதுவே ஒருவரின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது, இளமை பருவத்தில் நெருப்பின் தன்மை கொண்ட பித்தம் அதிகமாக இருக்கும் ஏனென்றால் அந்த வயதில் உத்வேகம் மனஉறுதி இவை எல்லாம் தேவை படுவதால் பித்தம் அதிகரிக்கும். இயல்பாகவே பித்த தோஷம் உள்ளவர்களுக்கு இளமை பருவத்தில் சிரமங்கள் அதிகம் இருக்கும்.


வாதம் வயதான காலத்தில் ஒருவருக்கு வரக்கூடியது. வாதம் என்றால் அதீத அசைவு அல்லது அசைவற்ற தன்மை இரண்டையும் குறிக்கும், அதனாலேயே வயதான காலத்தில் நடுக்கம் அல்லது கை கால்களை அசைக்க முடியாமல் போதல் போன்றவை வருகிறது. இந்த மூன்று தோஷங்களிலும் இன்றைக்கு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது பித்த தோஷத்தில் தான்.

நமது பாரம்பர்ய மருத்துவ முறைப்படி பித்த தோஷத்திற்கு சிறந்த மருந்தை மாதுளம்பழ சாரும் நெல்லி சாரும் தான், இதற்கு பிறகு பாலை சர்க்கரையோடு சேர்த்து அருந்தினால் பித்த தோஷத்தினால் வரும் பாதிப்பை முற்றிலும் அகற்ற முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News