Kathir News
Begin typing your search above and press return to search.

பூனை குறுக்கே சென்றால் தீமையா? அறிவியல் சொல்லும் அதிசய உண்மை!

பூனை குறுக்கே சென்றால் தீமையா? அறிவியல் சொல்லும் அதிசய உண்மை!

பூனை குறுக்கே சென்றால் தீமையா? அறிவியல் சொல்லும் அதிசய உண்மை!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  23 Dec 2020 8:41 AM GMT

சில விஷயங்கள் மரபுகள் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளாக உருவெடுப்பதும் உண்டு. முந்தைய காலத்தில் சில விஷயங்கள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக இருட்டிய பின் முகம் வெட்டுவது, முடியை திருத்துவது போன்ற செயல்கள்.

இவையெல்லாம் சில குறிப்பிட்ட நேரத்தில் செய்ய கூடாது என சொன்னதன் காரணம், அன்றைய காலத்தில் அதற்கு சூழ்நிலை இருக்கவில்லை. உதாரணமாக,, வீட்டிலிருந்து ஊசியை விளக்கு வைத்த பின் கொடுக்க வேண்டாம் என்பார்கள். ஏன்? அன்றைய காலத்தில் போதுமான வெளிச்சம் இருக்காது. அந்த நேரத்தில் காயம் ஏற்படுத்தக்கூடிய கூர்மையான பொருட்களை ஒருவருக்கு கொடுப்பதால் அது நம்மை காயப்படுத்தக்கூடும் என்பதால்.

இது போல் முந்தைய காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சில நம்பிக்கைகளுக்கு காரணமாக, அன்றைய சூழ்நிலையும், வாழ்க்கை முறையும் காரணமாக இருந்தது. கால மாற்றத்தில் சில நம்பிக்கைகள், சடங்குகள் காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுதல் பெறுகின்றன. ஆனால் மாறாமல் இன்றும் ஒரு சில நம்பிக்கைகள் கடைப்பிட்டிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது, பூனை குறுக்கே செல்வது.

நிமித்த சாஸ்திரத்தின் படி நாம் ஒரு காரியத்திற்காக வெளியே செல்கையில் கையில் நிறைந்த குடத்துடன் ஒரு பெண் வருவது, மங்களகரமான கோலம் இட்ட வீடு, நல்ல மழை போன்ற விஷயங்கள் நல்ல சகுனமாகவும். பூனை குறுக்கே செல்வது, பறவைகளின் அபாய ஓலம், மிருகங்கள் மிக வித்தியாசமான முறையில் கத்துவது போன்றவை கெட்ட சகுனங்களாகவும் பொதுவாக சொல்லப்படுகின்றன.

இன்று ஏராளமான நகைச்சுவைகள் இந்த பூனை குறுக்கே போவது என்ற நம்பிக்கையை சார்ந்து சொல்லபடுகிறது. பூனை அதனுடைய வேலையாக செல்கிறது, நீங்கள் உங்கள் காரியத்திற்கு செல்லுங்கள் என்ற பொருளில் பலரும் பகுத்தறிவும் பேசுகிறார்கள். உண்மையில், இந்த நம்பிக்கை ஏன் உருவானது என்ற காரணத்தை ஆராய்ந்தால், முந்தையா காலத்தில் வெளியே காரியமாக கிளம்புவர்கள், மாட்டுவண்டி அல்லது குதிரை வண்டியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அப்போது பூனை குறுக்கே செல்கையில் அதனுடைய கண்கள் மிளிர்வு தன்மையுடன் இருக்கும். இந்த தன்மை சில சமயங்களில் மாடு, குதிரைகளை அச்சமுற செய்யலாம். இதனால் அவை சம்நிலை இழந்து பயணம் தடைபடலாம். இதற்காகவே இந்த கூற்று சொல்லப்பட்டது. ஆனால் இன்று காலமும், சூழலும் மாறியிருக்கிறது. இந்த சகுன நம்பிக்கையை எப்படி சாமர்த்தியமாக கையாள்கிறோம் என்பது நம்முடைய தனிப்பட்ட விருப்பத்தை பொருத்தது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News