சாலையில் கிடக்கும் பணத்தை எடுத்தால் நன்மையா? என்ன சொல்கிறது சாஸ்திரம்?
சாலையில் கிடக்கும் பணத்தை எடுத்தால் நன்மையா? என்ன சொல்கிறது சாஸ்திரம்?
By : Kathir Webdesk
நாம் பல முறை சாலைகளை கடக்கும் போது, எதேர்ச்சையாக சில பொருட்கள் நமக்கு கிடைக்கும். உதாரணமாக கைகுட்டை, சிலரின் கைப்பை, பர்ஸ் போன்றவை. மாறாக சில சமயங்களில் சாலைகளில் பணம் விழுந்திருப்பதை நாம் கண்டிருப்போம். அது சிறு நாணயம் துவங்கி பெரும் தொகையாக கூட இருக்கலாம்.
யாரொருவர் அப்படி பணத்தை காண்கிற போது, அதை எடுக்கும் ஆர்வமற்று, அந்த பணத்திற்குரிய உண்மையான நபரே வந்து எடுத்து கொள்ளட்டும் என நினைக்கிறாரோ அதுவே அறம் சார்ந்த சிந்தனை. அதுவே சரியான அணுகுமுறை. குறிப்பாக இது போன்ற அணுகுமுறை உள்ளவர்களின் கண்களுக்கே பணம் அல்லது நாணயம் தட்டுபடுவதும் இயற்கையின் விளையாட்டே!
மற்றவரின் பணத்தை நாம் எடுக்க கூடாது என்பது நேர்மையான சிந்தனை என்ற போதும். அப்படி ஒன்று நம் வாழ்வில் நிகழ்ந்தால் அது நமக்கு நடக்கவிருக்கிற ஏதோவொன்றை குறிக்கும் நிமித்த அறிகுறி என்கிறது நிமித்த சாஸ்திரம்.
காரணம் பணம் என்பது ஒரு வகையான ஆற்றல். அதிகாரம். மதிப்பு என அனைத்து வலிமையான ஆற்றலையும் தன்னகத்தே கொண்ட ஒரு அம்சம். காரணம் பணம் என்கிற பொருள் மட்டுமே உலகில் பல கோடி கரங்களை கடந்து சுழன்று கொண்டேயிருக்கிறது. அது ஒவ்வொரு கரங்களுக்கு சென்று கடக்கும் போதும், ஒவ்வொரு வகையான ஆற்றலை அது தன்னகத்தே வாங்கி கடக்கிறது. எனவே சக்திகளுள் வலிமையானது பணம் என்றும் சொல்லலாம்.
நீங்கள் கடக்கும் சாலையில் நாணயம் உங்களுக்கு கிடைத்தால், ஒரு புதிய வாழ்வு தொடங்க இருக்கிறது என்று பொருள். பெரும் வாய்ப்பு ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது என்று அர்த்தம். நாணயத்தை சாலையில் காண்பது, நீங்கள் சரியான வெற்றி பாதையில் செல்கிறீர்கல் என்பதன் அறிகுறி மேலும் நாணயத்தை கண்டெடுப்பது உறவுகள் வலுப்படும் என்பதையும் உணர்த்துவாக சொல்லப்படுகிறது.
நீங்கள் ரூபாய் தாளை சாலையில் கண்டால். மனதில் அப்போது எது குறித்து அச்சம் கொண்டிருக்கிறீர்களோ அதை பறக்க விட்டு உங்கள் மனம் சொல்லும் பாதையில் உறுதியாய் செல்லுங்கள் என்று பொருள். நீங்கள் மனதில் சரியான பாதையை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று பொருள். அதை நோக்கி தளராமல் செல்லலாம் என்கிற சமிக்கையே சாலையில் கிடக்கும் ரூபாய் தாள். நிச்சயம் ஒரு நேர்மறை மாற்றம் உங்கள் வழியில் காத்திருக்கிறது என்று பொருள்.
இவையெல்லாம் சிலருகு பலிக்கலாம், பலிக்காமலும் போகலாம். நல்ல உற்சாகமான சிந்தனைகளை வாழ்க்கையில் எடுத்து கொள்வது எப்போதும் நம்மை புத்துணர்வாக வைத்திருக்கும். எனவே இனி சாலையில் பணமிருந்தால் எடுப்பதும் எடுக்காததும் உங்கள் விருப்பம். ஆனால் உங்களுக்கு ஒரு அதிர்ஷட வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக்கொள்ளலாம்.