Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டின் குழாயில் வழியும் நீர் பண விரயத்தின் அறிகுறியா?

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மைகள்

வீட்டின் குழாயில் வழியும் நீர் பண விரயத்தின் அறிகுறியா?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  11 Nov 2020 5:45 AM GMT

ஒருவர் வாஸ்துவின் பலன்களை முழுமையாக பெற வேண்டுமெனில், அதற்கு ஆற்றல் முழுவதையும் உள்வாங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். மற்றும் இந்த பிரபஞ்ச ஆற்றலும் ஒத்திசையும் தன்மையுடன் இருக்க வேண்டும்

இதில் பணம் பொருளாதாரம் என்பது வாழ்வாதாரத்தின் முக்கிய காரணி. வாஸ்து சாஸ்திரத்தின் படி ஐந்து பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, பூமி, ஆகாயம் காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் ஒரு இடத்தில் சமநிலையுடன் இருத்தல் அவசியம். இதில் ஒன்று தவறினாலும் அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்க கூடியதாக அமைந்து விடும்.

எனவே வீடுகளில் சுபிக்‌ஷம் ஓங்குவதற்கு வாஸ்து நிபுணர்கள் சொல்லும் குறிப்புகளின் தொகுப்பு இங்கே.

  1. குபேர எந்தித்தை வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும். வட கிழக்கு திசையை ஆழ்பவர் குபேரன் என்பதால் அவரை இந்த இடத்தில் வைப்பது சிறப்பாக அமையும் . குபேர உருவம் அல்லது படம் இல்லாத வீடுகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை கூட வைக்கலாம்.
  2. வீடுகளில் பணத்தை ஈர்க்க, வீட்டின் முக்கியமான பத்திரம், ஆவணம், பணம் போன்றவைகளை தென் கிழக்கில் வைக்க வேண்டும்.
  3. வீட்டின் மூலைகளை சுத்தமாக வைத்தல் அவசியம். வீடுகளில் அப்போது தான் நல்ல ஆற்றல் பெருகும். இது வீட்டில் உறவுகள் வலுப்பெறவும், ஆனந்தம் நிலைக்கவும் இந்த ஆற்றல் உதவும்.
  4. மிக முக்கியமாக, வீட்டின் முக்கிய வாயில் கதவில் எந்தவித சேதமும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். நுழைவு கதவில் பிரச்சனையிருந்தால் அது நல்ல அதிர்வுகளை ஈர்க்காது என்பது நம்பிக்கை.
  5. நம்மாலான வடிவில் சிறிய நீர்நிலையை வைப்பது நல்லது. சிறிய மீன் தொட்டி அல்லது சிறு நீரூற்று போன்ற பொம்மைகளை வைக்கலாம். இதில் சுத்தமாக பாய்ந்தோடும் நீர்போல் நம் நிதி நிலையு சீராக இருக்கும் என்பதை குறிக்கும்.
  6. மிக மிக முக்கியமான வாஸ்து குறிப்பென்பது, வீட்டில் தண்ணீர் லீக்காவதை தவிர்ப்பது, சமையலறை, கழிவறை அல்லது வெளிப்புற தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள குழாய்களில் இருந்து நீர் வடிந்து கொண்டேயிருந்தால் அது பணம் விரயம் ஆக உள்ளது என்பதை குறிக்கும் நிமித்தம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். எனவே அந்த குறைபாடை விரைந்து சீர் செய்ய வேண்டும்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News