Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான மனரீதியான பிரச்சனைகளை போக்கி பேசும் தெய்வமாக விளங்கும் இசக்கி அம்மன்!

பெண்களுக்கு ஏற்படும் அத்தனை விதமான பிரச்சனைகளையும் போக்கி காத்தருளும் தெய்வமாக இருக்கும் இசக்கியமனை பற்றி காண்போம்.

பெண்களுக்கு ஏற்படும்  உடல் ரீதியான மனரீதியான பிரச்சனைகளை போக்கி பேசும் தெய்வமாக விளங்கும் இசக்கி அம்மன்!
X

KarthigaBy : Karthiga

  |  25 Dec 2023 5:45 PM GMT

இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். இந்த தெய்வத்தை பழையனூர் நீலியின் வடிவம் என்ற கருத்து உள்ளது. குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரட்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனை தீரும் என்பதும் நம்பிக்கையாகும்.


இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் பிரதானமாக இவருடைய சன்னதி அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம் இருந்தது, இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் இசக்கியம்மன் வழிபாடு காணப்படுகிறது. இசக்கியம்மன் - இசக்கி + அம்மன். இசக்கி என்ற சொல்லானது இயக்கி என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். இயக்கி என்ற பொதுமைப் பெயரை உடைய பலருள் இவரும் ஒருவர். இவரைப்போல எண்ணற்ற இயக்கிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.


இவ்வாறான இயக்கிகளில் சிலர் மட்டுமே வழிபடப்படுகிறார்கள். பொதுவாக குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்க கூடிய வடிவம் மற்றும் கைகளில் குழந்தை இல்லாத வடிவம் என இரு வடிவங்களில் வழிபடப்படுகிறார். அவர்களில் இயக்கியம்மன் மட்டுமே வழிபடப்படுகிறார். இயக்குபவள் என்ற அர்த்ததில் எண்ணற்ற பெண் எட்சிகளை அழைக்கின்றனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்கள் பலரின் காவல் தெய்வங்களாக இந்த இயக்கிகளில் சிலர் இருந்துள்ளார்கள்.


பந்திவிளை இசக்கி அம்மன் கோவில், புதுக்கடை(p.o), கன்னியாகுமரி தாழையடித்தட்டு இசக்கி அம்மன் திருக்கோவில், கட்டிமாங்கோடு(P.O), கன்னியாகுமரி அஞ்சுகண்ணுகலுங்கு அருள்மிகு மாடன் தம்புரான் இசக்கி அம்மன் ஆலயம் புதுக்கடை, கன்னியாகுமரி.வாலத்து இசக்கி அம்மன் கோவில், வண்டிகுடியிருப்பு, கன்னியாகுமரி.


ஈயான்குலம் இசக்கியம்மன் கோயில், மலையன்குளம் இசக்கியம்மன் கோவில், கல்லுப்பாலம் கல்பாலத்தடி இசக்கியம்மன் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்கல் இசக்கியம்மன் கோயில்,சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில், நெல்லை குறவன்மடம் இசக்கியம்மன் கோயில், தமுப்பந்தல் இசக்கியம்மன் கோயில், கன்னியாகுமரி


கள்ளிக்குப்பம் இசக்கியம்மன் கோயில், அம்பத்தூர், சென்னை. மேக்கோடு இசக்கியம்மன் கோயில் பனவிளை அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில்,வெட்டுவெந்நி,மாா்த்தாண்டம். உரப்பனவிளைசரல் அருள்மிகு தேவி ஸ்ரீ இசக்கிஅம்மன் திருக்கோவில். கடங்கநேரி அருள்மிகு பூ இசக்கியம்மன். ஆல்தரை இசக்கியம்மன் பறக்கை, செட்டிதெரு. இவை அனைத்தும் இசக்கியம்மன் அருள் பாலிக்கும் திருத்தலங்களில் சில ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News