Kathir News
Begin typing your search above and press return to search.

வருடத்தில் ஒரே நாள் அதுவும் ஐந்து மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோவில்.

வருடத்தில் ஒரே நாள் அதுவும் ஐந்து மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோவில்.

வருடத்தில் ஒரே நாள் அதுவும் ஐந்து மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோவில்.

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  31 Dec 2020 5:30 AM GMT

கோவில்கள் கட்டப்பட்டதே பக்தர்கள் தெய்வீகத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி கொள்ள தான். தங்களின் முழு சரணாகதியை வெளிப்படுத்துவதற்கான இடமாக கோவில் அமைகிறது. எந்நேரமும், எந்த பொழுதும் நமக்கு தெய்வம் துணையுண்டு என உணர்த்தும் விதமாக கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் சூட்சும வடிவில் நமக்கு எல்லா நேரமும் அருள் பாலிக்கும் என்றாலும், நிதர்சனத்தில் கோவில்கள் திறந்திருந்து தரிசனம் வழங்குவதற்கு என சில குறிப்பிட்ட நேரம் காலம் உண்டு.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஒரு சில கோவில்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. அதற்கு பல்வேறு காரணங்களும் உண்டு. அந்த வகையில் வருடத்திற்கு ஒரே ஒரு முறை ஒரே ஒரு நாளில் அதுவும் குறிப்பிட்ட ஐந்து மணி நேரத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என்பது தான் ஆச்சரியம்.

இந்த பழம்பெரும் கோவில் நிறை மாதா கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சட்டீஸ்கரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். கோவில் திறக்கப்படும் அந்த ஐந்து மணி நேரத்தில் தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடெங்கும் இருந்து இங்கே குவிகின்றனர். இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டும் சைத்ர நவராத்ரி அன்று திறக்கப்படுகிறது. அந்நாளில் இயற்கையாகவே இங்கே ஒரு ஒளி பிறக்கிறது, குறிப்பிட்டு சொன்னால் அதிகாலை 4 மணி முதல், 9 மணி வரையில் அந்த நவராத்ரி நாளில் இங்கே கோவில் திறக்கப்படுகிறது.

அந்த கோவில் திறக்கப்படும் நேரத்தில் மொத்த கிராமமும் பெரி ஆற்றங்கரையில் நிறைந்திருப்பதை காண கண் கோடி வேண்டும். இந்த்அ கோவிலில் எரியும் விளக்கு எவ்வாறு எரிகிறது என்பது புரியாத புதிர். மேலும் அந்த தீபம் நவராத்ரியின் ஒன்பது நாட்களும் எரிகிறது. மற்ற கோவில்களை போல குங்குமமோ, அல்லது வேறு எந்த மங்கள பொருட்களோ இங்கே அர்பணிக்கப்படுவதில்லை. இங்கே தேவிக்கு மக்கள் தேங்காயை மட்டும் அர்பணித்து தூபமேற்றி வழிபடுகின்றனர்.

இங்கு ஓர் அற்புத சக்தி இருப்பதை மக்கள் உணருகின்றனர். இந்த கோவிலுக்குள் எந்த திருவுருவ சிலையும் இல்லை. ஆனாலும் இங்கு ஒரு புனிதமான தெய்வீக தன்மை நிறைந்திருப்பதாய் அனைவரும் நம்புகின்றனர். மேலும் நிறை மாதாவை வணங்குவதால், வேண்டிய வரங்கள் கிடைத்து, பக்தர்களின் அச்சமும் துயரமும் நீங்குகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News