Kathir News
Begin typing your search above and press return to search.

தடடைகளை நீக்கி வெற்றியைத் தரும் ஜெயங்கொண்டீஸ்வரர்

நம்பினாருக்கு நடராஜன் என்பது முதுமொழி. அவன் அன்றி ஓரளவு அசையாது என்பதற்கு ஒரு உதாரண தலமாக திகழ்கிறது நத்தக்காடையூர்.

தடடைகளை நீக்கி வெற்றியைத் தரும் ஜெயங்கொண்டீஸ்வரர்

KarthigaBy : Karthiga

  |  11 Nov 2023 6:30 AM GMT

கொங்கு நாட்டிலே சோழர்களின் ஆட்சி பலகாலம் நடித்தது. சோழர்களது ஈடு இணை இல்லாத சிவபக்தியின் காரணமாக கொங்கு தேசத்தில் 27 சிவாலயங்களை சோழர்கள் கட்டமைத்தனர். சிவாலயங்களிலும் அருளும் சிவபெருமான் ஸ்ரீ சோளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராஜராஜ சோழனின் பல்வேறு பட்ட பெயர்களில் ஒன்று ஜெயம் கொண்டான் நத்த காடையூர் திருத்தலத்தில் நிறுவப்பட்டியில் சிவபெருமான் மட்டும் ராஜ ராஜ சோழனின் பட்டப்பெயரால் 'ஸ்ரீ ஜெயம் கொண்டேஸ்வரர்' என்று போற்றப்படுகிறார்.


1708 ஆம் ஆண்டில் காங்கேய நாட்டை ஆட்சி செய்தவர் கொன்றைவேல் சர்க்கரை மன்றாடியார். இவர் ஆட்சி செய்யும் காலத்தில் இங்குள்ள 'ஜெயங்கொண்டீஸ்வரர்' ஆலயத்தை திருபணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். சிறந்த சிவ பக்தரான அவர் சிவாலய திருப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வேலையால் ஒருவன் தண்ணீர் எடுத்து வர சென்ற போது அவனை பாம்பு கடித்துவிட்டது. அவன் அலறிக்கொண்டே ஓடி வந்து கோவிலின் முன்னே மயங்கி விழுந்தான். அவன் வாயில் நுரை தள்ளியது. விஷயம் அறிந்து ஓடி வந்தார் கொன்றைவேல் சர்க்கரை மன்றாடியார்.


சிவாலய திருப்பணிக்கு என்ன தடையோ என்று பயந்தார். உடன் ஆலயத்திற்குள் சென்று ஒரு கைப்பிடி அளவு விபூதியை எடுத்து வந்து "ஜெயங்கொண்ட நாதனே நமசிவாய பயம் கொண்ட பாம்பு விஷம் இறங்கவே சிவசிவ" என்று சொல்லியபடி அவனது உடம்பு முழுவதும் பூசி விட்டார். 28 முறை இவ்வாறு ஜெபித்தபடி விபூதியை பூசினார். பாம்பு கடித்த பயணித்தவன் உடம்பில் உயிர் வந்தது கண்விழித்து பார்த்தான். அவனது உடம்பில் ஏறிய பாம்பின் விஷம் முழுவதும் இறங்கியது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து நின்றான்.


பலரும் இந்த அற்புத நிகழ்வை கண்டு அதிசயத்து நின்றனர். மன்றாடியாரோ ஆண்டவனை வணங்கி பேரானந்தம் அடைந்தார். ஈரோடு நெடுஞ்சாலைக்கு மேற்கேஆலயம் அழகுற அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வெளியே பிரம்மாண்டமான இரண்டு தீப ஸ்தம்பங்கள் எழுந்து நிற்கின்றது. இதன் கீழே ராஜ சோழன் மீது திருவுருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இத்தல வழிபாட்டினால் விஷத்தால் உண்டான வியாதிகள் குணமடையும். தொழிலில் ஏற்படுகின்ற தடைகள் நீங்கும். தடைபட்ட மங்கல நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறும். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து அர்ச்சலூர் வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நத்தக்காடையூர். ஆலயத்தில் இரண்டு கால பூஜைகள் நடந்திடும். தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் திறந்திருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News