Kathir News
Begin typing your search above and press return to search.

காளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று உகாதி பண்டிகை!

காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று உகாதி பண்டிகை கொண்டாடப் படுகிறது.

காளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று உகாதி பண்டிகை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 April 2022 4:22 AM GMT

காளஹஸ்தி சிவன் கோயிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் விசேஷமான ஒரு பண்டிகையாகவும் அங்கு இது அறியப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதையொட்டி அன்று காலை 9 மணியளவில் மூலவர் சன்னதி அருகில் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 4 மணியளவில் பஞ்சாங்க சிரவணம், இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


முன்னதாக காலை 8.30 மணியளவில் பக்த கண்ணப்பருக்கு சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப் படுகிறது. அதன்பன்னர் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் கவிஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் இந்த தகவலை அனைத்தும் காளகஸ்தி கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பண்டிகையை ஒட்டி காளகஸ்தி கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் பக்தர்களின் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Malaimalar news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News