மகாசிவராத்திரி: காளஹஸ்தி கோவிலில் தொடங்கிய உற்சவம்!
மகாசிவராத்திரி காளஹஸ்தி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டது.
By : Bharathi Latha
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் சிவலிங்கம் மிகவும் பழமையானது. மேலும் இங்குள்ள அர்ச்சகர்கள் கூட தங்கள் பூஜை நேரத்தில் சிவலிங்கத்தை தொடாமல் பூஜைகள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் தோஷங்கள் மற்றும் பிற சடங்குகளை போக்கும் ஒரு சிறந்த தளமாக இது அறியப்படுகிறது. இந்த காளஹஸ்தி பரிகார பூஜையை அக்கோவிலில் செய்த பிறகு நேரே உங்கள் இல்லத்திற்கு திரும்ப வேண்டும். பிற கோவில்களுக்கோ, மற்றவர்களின் வீடுகளுக்கோ செல்லக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட கோவிலில் தற்போது மகாசிவராத்திரி பண்டிகையை ஒட்டி காளஹஸ்தி கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் உள்ள பல்வேறு இடங்களில் கற்பூரம் ஏற்றியும், மாவிளக்கு வைத்து வழிபட்டார்கள். கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தங்கக்கொடி மரம் எதிரில் 5 திசைகளில் அமர்த்தப்பட்டனர். பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் தங்க கொடி மரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. மேலும் பக்தர்களின் காணிக்கை சேலைகள் கொடிகளில் கட்டப்பட்டது.
மதியம் ஒரு மணியளவில் வேத பண்டிதர்கள் ஆகம முறைப்படி கலசங்களை வைத்தும், சிறப்பு யாகம் வளர்த்தும் சிறப்பு பூஜைகளை செய்தனா். கொடியேற்றத்துக்கு பூஜை செய்வதற்கான மங்கல பொருட்களை உபயதாரர்கள், பொதுமக்கள் பல்வேறு நன்கொடை பொருட்களையும் அளித்துள்ளார்கள். காளஹஸ்தியில் பக்தர்கள் தங்கள் வேண்டிய அனைத்து விஷயங்களையும் பெற முடியும் என்பது இங்குள்ள ஒரு ஐதீகம்.
Input & Image courtesy: Malaimalar