Kathir News
Begin typing your search above and press return to search.

கானாத்தூர் ஜகன்நாதர் ஆலயம்- தெரியாத தகவல்கள்

பூரியில் உள்ளதைப் போலவே ஒரு ஜெகனாதர் கோவில் சென்னையில் அமைந்துள்ளது பலரும் அறியாத தகவல்.

கானாத்தூர் ஜகன்நாதர் ஆலயம்- தெரியாத தகவல்கள்
X

KarthigaBy : Karthiga

  |  26 Aug 2023 5:45 AM GMT

கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூரில் ஜெகன்னாதர் கோவில் அமைந்துள்ளது. இத்தளத்தில் மகா கும்பாபிஷேகம் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இத்தலம் தட்சிண ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. காஞ்சியில் இருந்த கிரானைட் மற்றும் ராஜஸ்தானில் இருந்த வெள்ளைபளுங்கி கற்களை கொண்டு ஓரிய பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பூசாரிகள் ஓரிய பாணியில் பூஜைகளை செய்து வருகிறார்கள். இத்தலத்தின் முக்கிய திருவிழா ரத யாத்திரை யாகம்.


கோவிலுக்குள் நுழைந்தால் முதலில் தென்படுவது மிக வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைந்த துவஜஸ்கம்பம்.கிரானைட் கல்லாலான இந்த தூணை ஒரு ஆமை தன் முதுகில் தாங்கி பிடித்து இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. ஆமையின் மீது பாம்புகளின் சிற்பங்களும் மேற்புறத்தில் விநாயகர் அதற்கு மேல் ஆதிசேஷன் முதலான சிற்பங்களும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டன . இதற்கு பின்னால் மூலக் கோவில் அமைந்துள்ளது. ஜெகன்நாதர் கோவிலில் நுழைவு வாசலில் இருந்து கருவறை வரை 22 படிகள் அமைக்கப்பட்டுள்ளன .


இந்த 22 படிகளை கடந்து சென்றால்தான் நாம் ஜகந்நாதரை தரிசிக்க முடியும். ஐம்புலன்களாக கண்காது மூக்கு தோல், நாக்கு மற்றும் ஐந்து புராணங்களான பிரானா, அபானா, வியானா, உதானா சமானா மற்றும் ஐம்புலன்களின் செல்களான பார்த்தல், கேட்டல், ருசித்தல் வாசனை ,தொடு உணர்வு மேலும் பஞ்சபூதங்களின் நிலம், நீர் ,நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் புத்தி அகங்காரம் ஆகிய 22 அம்சங்களையும் இந்த 22 படிகள் பிரதிபலிக்கின்றன. பூரி ஜெகநாதர் கோவிலிலும் வெளியில் இருந்து கருவறை அடைய 22 படிகளை கடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் 'நவ களேவரா' என்ற உற்சவம் நடைபெறும். வருடத்தில் இரண்டு ஆஷாட மாதங்கள் நிகழும் போது இந்த உற்சவம் நடைபெறும். இது 8, 12 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்த உற்சவத்தின் போது பழைய சிற்பங்கள் மாற்றப்பட்டடு புதிதாக சுபத்திரை, பலபத்திரர் சிற்பங்கள் புனிதமான வேப்ப மரத்தினால் செய்யப்பட்டு கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும். கானாத்தூர் ஜெகன்நாதர் கோவில் காலை ஆறு முப்பது மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும் பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். சென்னையில் கோயம்பேடு பிராட்வே கிண்டி முதலான பகுதிகளிலிருந்து கானாத்தூருக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாமல்லபுரத்தில் இருந்தும் மாநகரப் பேருந்து வாயிலாக கானாத்துரை எளிதில் அடையலாம்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News