திரவிட கட்டிடக்கலையில் உச்சமாக திகழ்கிறது அழகர் கோவில் !
எமதர்மர் இந்த கோவிலின் அழகரை வணங்கி இந்த இடத்திலேயே விஷ்ணு பெருமான் தங்க வேண்டும் என கேட்க்கொண்டு, விஸ்வகர்மாவை கொண்டு இந்த கோவிலை கட்டினார் என்கிற குறிப்புகளும் வரலாற்றில் உண்டு.
By : G Pradeep
தமிழகத்தின் புகழ் பெற்ற மதுரையில் அமைந்திருக்கும் பகுதியின் பெயர் அழகர் கோவில். இங்கு கோவில் கொண்டிருக்கிறார் கள்ளழகர். இந்த கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக திகழ்கிறது. விஷ்ணு பரமாத்மஅ இங்கே கள்ளழகர் என்ற பெயரிலும், இலட்சுமி தேவி திருமாமகள் என்ற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர். திவ்ய பிரபந்தத்தில் இக்கோவிலின் பெருமை போற்றி பாடப்பட்டுள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் ஸ்தலமாகும். திரவிட கட்டிடக்கலையில் உச்சமாக திகழ்கிறது இத்தலம்.
இந்து புராணங்களின் படி, சுதபமுனிவர் என்கிற மகா முனி திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கையெனும் சிலம்பாற்றில் நீராடிக்கொண்டிருதார். எதிர்பாரா விதமாக துர்வாச முனிவரை அவர் கவனிக்கமால் விட்டதன் விளைவாய் கோபமுற்ற துர்வாசர் சுதபமுனியை மண்டூகமாக ( தவளை) ஆவாய் என சாபமிட்டார். இதனலாலேயே இவருக்கு மண்டூக மகரிஷி என்ற பெயரும் உண்டு. இவர் வைகை ஆற்றின் கரையில் மண்டூக வடிவத்திலேயே மஹா விஷ்ணுவை எண்ணி தவம் இயற்றியனார். மண்டூக மகரிஷியை சாபத்தில் இருந்து மீட்க விஷ்ணு பெருமான் இங்கே அழகராக தோன்றினார் என சொல்லப்படுகிறது. மண்டூக முனிவரை மீட்க விஷ்ணு பெருமான், தேனூர் வழியாக மலைப்பட்டி அலங்காநல்லூர் மற்றும் வயலூர் வந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. திருமலை நாயக்கரின் ஆட்சி காலத்தில் அதாவது 1653 ஆம் காலகட்டத்தில் மண்டூக மகரிஷியை மீட்கும் விழா வண்டியூர் கிராமத்தில் நடைபெற்று வந்ததாகவுமபின் இந்த நிகழ்வு திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட தேனூர் மண்டபத்திற்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எமதர்மர் இந்த கோவிலின் அழகரை வணங்கி இந்த இடத்திலேயே விஷ்ணு பெருமான் தங்க வேண்டும் என கேட்க்கொண்டு, விஸ்வகர்மாவை கொண்டு இந்த கோவிலை கட்டினார் என்கிற குறிப்புகளும் வரலாற்றில் உண்டு.
ஒவ்வொரு வருடமும் இங்கு நிகழும் சித்திரை திருவிழாவை காண இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். வரலாற்றின் படி மதுரை மீனாட்சி அம்மையின் உடன் பிறந்த சகோதரர் அழகர். மீனாட்சி அம்மனின் திருமணத்தின் போது கள்ளழகர் கோவிலிருது புறப்பட்டு மதுரை நகர் நோக்கி வருகிறார். அழகர் கள்ளர் வேடத்தில் வருகை புரிவதால் கள்ளழகர் என அழைக்கபடுகிறார். இதில் முக்கிய வைபமே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி கடப்பது தான். அவர் ஆற்றில் இறங்குகிற போது, தங்கைக்கு திருமணம் முடிந்ததை அறிந்து கருப்பராயர் மண்டபம் திரும்புவார். அங்கே பத்து அவதாரங்கள் எடுத்து பின் அழகர் கோவில் திரும்புவார்.
திருப்பதி லட்டினை போல, பழனி பஞ்சாமிர்தத்தை போல இங்கே காணிக்கையாக பெறப்படும் தானியங்களை கொண்டு செய்யப்படும் தோசை பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது.
Image : DivineTraveller