Kathir News
Begin typing your search above and press return to search.

நான்கு கரங்களுடன் காட்சி தரும் ஶ்ரீரங்கத்து காட்டழகிய சிங்க பெருமாள் !

நான்கு கரங்களுடன் காட்சி தரும் ஶ்ரீரங்கத்து காட்டழகிய சிங்க பெருமாள் !

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  15 Dec 2021 12:30 AM GMT

திருச்சி மலை கோட்டை நகரம் ஆன்மீக மையம் என்று கூட சொல்லலாம். காரணம் வரலாற்று சிறப்பு மிக்க ஏராளமான கோவில்கள், புராணங்களில் முக்கியத்துவம் பெற்ற ஸ்தலங்கள் நிரம்பிய இடம் இது. திருச்சியின் அருகே இருக்கும் ஶ்ரீரங்கம், ஶ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவில். பெருமதிப்பும், பெரும் தொன்மையும் கொண்ட இடமாகும். இக்கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில், கிழக்கில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காட்டழகிய சிங்க பெருமாள் கோவில். இக்கோவில் பாண்டிய அரசர்களால் கட்டப்பெற்றது.

ஶ்ரீ பெரியாழ்வாரின் தீவிர பக்தரான வல்லபதேவன் இத்திருத்தலத்தை 9 ஆம் நூற்றாண்டில் கட்டினார்.

இந்த பகுதி முன்னொரு காலத்தில் கடும் வனமாக இருந்தது. இக்கோவிலின் இருபுறமும் நீரோடைகள் இருந்தன. தென்புறத்தில் காவேரியும், வடப்புறத்தில் கொல்லிடம் ஆறும் பாய்ந்தோடியது. மேலும் இந்த இடம், ரிஷிகள், முனிவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்த இடமாக இருந்தது. இந்த இடம் அடர்ந்த காடு என்பதால் காட்டு விலங்குகளில் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது. முனிவர்களால் காட்டு விலங்குகளை தங்கள் தவத்தின் பலத்தால் அழித்திட முடியும் என்றாலும் அது பாவம் என்பதால். விஷ்ணு பெருமானின் அவதாரமான நரசிம்மரை எண்ணி கடும் தவம் இயற்றினர். ரிஷிகளின் தவத்தினை மெச்சி, அவர்களுக்கு அருள் பாலித்தார் நரசிம்மர்.

அவர்களின் கோரிக்கையின் படி, இலட்சுமி தேவியுடன் இங்கேயே குடிகொண்டு அவர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பதாக உறுதியளித்தார். காட்டின் இடையே அழகுற தோன்றியமையால் காட்டு அழகிய சிங்கப் பெருமாள் என்ற பெயர் நிலைத்தது. இந்த கோவிலுக்கு மற்றொர் பெயரும் உண்டு ஏகாந்தமன் கோவில். மேலும் கேட்கும் வரத்தை அள்ளி வழங்குவதால் இவ்வரை வரபிரசாதி என்றும் அழைக்கின்றனர்.

பிரதோஷம் அன்று இக்கோவிலில் வ்ழிபடுவதால் பக்தர்களின் குறைகள் தீருகின்றன. மேலும் பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று இங்கே சிறப்பு திருமஞ்சனம் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு மூலவராக அருள் வழங்கும் ஶ்ரீரங்கம் இலட்சுமி நரசிம்ம பெருமாள் 8 அடி உயரமாவார். மற்றொரு சிறப்பாக இங்கே தரிசனம் வழங்கும் பெருமாள் மேற்கு நோக்கி அருள் வழங்குகிறார். இங்கிருக்கும் நரசிம்மருக்கு மற்றொரு சிறப்பு பெயரும் உண்டு "சதுர்புஜ நரசிம்மர்ர் "காரணம் இவருக்கு இங்கே நான்கு கரங்கள். இலட்சுமி தேவி கைகளில் மலரை ஏந்திய வாறு நரசிம்மரின் மடியில் அமர்ந்திருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும்.

Image : The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News