Kathir News
Begin typing your search above and press return to search.

கும்பகர்ணர் ஆறு மாதம் உண்டு, ஆறு மாதம் உறங்கியது ஏன்? சுவாரஸ்ய வரலாறு.!

கும்பகர்ணர் ஆறு மாதம் உண்டு, ஆறு மாதம் உறங்கியது ஏன்? சுவாரஸ்ய வரலாறு.!

கும்பகர்ணர் ஆறு மாதம் உண்டு, ஆறு மாதம் உறங்கியது ஏன்? சுவாரஸ்ய வரலாறு.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  16 Dec 2020 5:45 AM GMT

அன் சங்க் ஹீரோஸ் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பெரிதும் புகழ்பெறாத நாயகர்கள், அந்த வரிசையில் ராமயாணத்தில் வரும் முக்கியமான மற்றும் சுவரஸ்யமான நாயகன் கும்பகர்ணன்.

உண்மையில் யாரிந்த கும்பகர்ணன்? கும்பகர்ணன் ஶ்ரீ ராமரை எதிர்த்த ராவணனின் தம்பி. ராட்ஷ குலத்தில் பிறந்திருந்தாலும், மனதளவிலும் சிந்தனையளவிலும் தர்மத்தின் பக்கம் நின்றவர். தன்னுடைய அண்ணின் வார்த்தைக்காக மட்டுமே ஶ்ரீராமரை எதிர்த்து களம் கண்டவர்.

நம் வீடுகளில் யாரேனும், அளவுக்கு அதிகமாக உண்டாலோ உறங்கினாலோ கும்பகர்ணன் என விளையாட்டாக சொல்லும் பழக்கம் உண்டு. இது காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது கும்பகர்ணன் ஒரு வருடத்தின் பாதி மாதங்களில் உண்டும் , பிற மாதங்களில் உறங்கியும் வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த விசித்திர பழக்கம் எதனால் வந்தது? தேவ லோகத்தின் அதிபதியான இந்திரன் கும்பகர்ணனுக்கு இருந்த பலத்தை கண்டு பொறாமை கொண்டதாக ஒரு வரலாறு உண்டு.

ஒருமுறை, ராவணன் தன்னுடைய சகோதரர்களான விபீஷணன் மற்றும் கும்பகர்ணனுடன் பிரம்ம தேவரின் ஆசியை பெற பெரும் யாகம் ஒன்றை நடத்தியுள்ளனர். அவர்களின் யாகத்தினை ஏற்று பிரம்ம தேவர் தம்பதி சமேதராக, சரஸ்வதி தேவியுடன் காட்சியளித்துள்ளார். தேவர்களுக்கு எதிரான வரத்தையே பெற இருக்கிறார்கள் என்பதை அறிந்த இந்திரன், சரஸ்வதி தேவியின் உதவியை நாடியுள்ளார். அவருக்கு உதவும் விதமாக, வரத்தை கேட்க இருந்த வேளையில் கும்பகர்ணனின் நாவில் சிறிய பிறழ்வை ஏற்படுத்தினார் சரஸ்வதி தேவி அதன் படி, தனக்கு “இந்திராசனம்” ( இந்திரனின் பதவி அல்லது இருக்கை) வேண்டும் என கேட்கவிருந்த சமயத்தில் கும்பகர்ணனின் நா இடறி “நித்ராசனா “ ( உறக்கத்தின் இருக்கை) என கேட்டு விட்டார்.

இதை வேறுவிதமாகவும் சொல்வதுண்டு, “நிர்தேவத்வம் “( தேவர்களை அழிக்க வேண்டும்) என கேட்பதற்கு பதிலாக நா இடறி “நித்ரவத்வம் “( உறக்கம்) என கேட்டுவிட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு அந்த இடறலுக்கு உடனே பிரம்ம தேவர் ஆசி வழங்கவே அது அவருடைய வரமாக ஆனது. இந்த வரத்தின் அபாயம் உணர்ந்த இராவணன் இதற்கான விமோட்சனம் கேட்டபோது, அளித்த வரத்தை திரும்ப பெற இயலாது, வேண்டுமானால் ஆறு உறங்கி, பின் ஆறு மாதம் விழித்திருக்கலாம் என வரமளித்தார். ஆறு மாதம் உண்ணாமல் உறங்கியே இருப்பதால், அடுத்த ஆறு மாதத்திற்கு அவரால் பசியை கட்டுபடுத்த முடிவதில்லை என்கிற வரலாற்று கதை உண்டு.

ஶ்ரீ ராமருடன் போர் புரிந்த போது, கும்பகர்ணன் உறக்கத்தில் இருந்தார். உறக்கம் களைந்து நிலைமையை உணர்ந்த போது தன் சகோதரர் ஆற்றியிருந்த பிழையை உணர முடிந்தது ஆனால் இவரும் மஹாபாரதத்தில் வரும் விகர்ணனை போல செய்யும் கர்மம் தவறென அறிந்தும், சகோதர தர்மத்திற்காக தீமையைன் பக்கம் நின்றவர் கும்பகர்ணன். போர்களம் கண்டு ஏராளமான வீரர்களை தாக்கி குறிப்பிட்ட பங்களிப்பை ஆற்றியிருந்தாலும், ஶ்ரீராமரின் கரங்களால் போரில் மடிந்தார் கும்பகர்ணன்.

நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ

Next Story
கதிர் தொகுப்பு
Trending News