Kathir News
Begin typing your search above and press return to search.

இலட்சுமி தேவிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு !

இலட்சுமி தேவிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு !
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  22 Nov 2021 12:30 AM GMT

இலட்சுமி எனும் சொல் சமஸ்கிருதத்தின் மூலத்தில் இருந்து வந்தது. இதன் பொருள் ஒன்றை ஈர்ப்பது. அல்லது இலட்ஷிய என்பது இலக்கு என்பதையும் குறிக்கும். வங்காளத்தில் தீபாவளி பண்டிகை அன்று இலட்சுமி தேவியை வணங்குவது வழக்கம். கொல்கத்தா போன்ற நகரில் காளி அன்னையை மகாலட்சுமி ரூபமாக தீபாவளி அன்று வழிபடுகின்றனர்.

இலட்சுமி தேவிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு. தாமரை மலரே இலட்சுமி தேவியின் இருப்பிடம் என்கிறது வரலாறு. தாமரையில் இருப்பதால் தான் இலட்சுமியை பத்மப்ரியா என்ற பெயர் கொண்டும் அழைக்கின்றனர். தாமரையை விருபம்புகையில் இலட்சுமியின் பெயர் பத்மலதாரா தேவி என்றும். தாமரை மாலையை அணிந்திருக்கையில் இலட்சுமியை பத்ம முகி என்றும், தாமரை போல் முகம் ஒளிர்கின்ற போது பத்மாக்ஷி என்றும், இலட்சுமியின் திருக்கண் தாமரையை போன்று ஒளிர்கின்ற போது பத்மாஷ்டா என்றும். கையில் தாமரையை ஏந்தியிருக்கையில் பத்ம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்.

இன்னும் நூற்றுக்கணக்கான பெயர்களை கொண்ட அம்பிகையை ஜகன் மாதா என்று அழைக்கிறது ஶ்ரீ மஹாலட்சுமி ஆஷ்டகம். இவரை வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற பொருட்களாக இருப்பது தாமரை பூ, சந்தனம், குங்குமம், வெற்றிலை, உலர் பழங்கள், பழங்கள் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், அரிசி மற்றும் தேங்காய்.

வியாழக்கிழமைகளில் மற்றும் முழு நிலவு நாளான பெளர்ணமியில் இலட்சுமி பூஜை செய்வது மிகவும் உகந்ததாகும். இலட்சுமியின் திருவுருவத்தை வடிக்கிற போது, தங்க காசுகள் அள்ளி வழங்குவதை போலவும், அவருக்கு பின் யானைகள் இருப்பது போலவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரின் ஐஸ்வர்யத்தை வழங்கும் பலத்தை உலக மக்களுக்கு புலப்படுத்துவதாக உள்ளது.

இலட்சுமி தேவி வழங்க கூடிய ஐஸ்வர்யம் என்பது வெறும் பணம் செல்வத்தை மட்டும் குறிப்பதல்ல. இலட்சுமி தேவியின் அருள் இருப்பவர்களுக்கு புகழ், பலம், வெற்றி, தங்கம், நவதானியங்கள், நல்ல புத்திரர்கள், மகிழ்ச்சி, ஆனந்தம், புத்தி, அழகு, உயர்ந்த இலட்சியம், உயர் தவம், அறம், நல்ல பண்புகள், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய பதினாறு விஷயங்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

மஹாலட்சுமிய அஷ்ட இலட்சுமி என 8 வகையாக வழிபடுகின்றனர். மேலும் இலட்சுமி தேவி பல ரூபங்களில் அருள் பாலிக்கிறார் உதாரணமாக ஶ்ரீதேவி, பூதேவி மற்றும் நீலா தேவி .

Image : VectorStock

Next Story
கதிர் தொகுப்பு
Trending News