Kathir News
Begin typing your search above and press return to search.

இலட்சுமி தேவி வாசம் செய்யும் இடங்கள் !

குபேரரின் படத்தை வைக்கும் இடம் !

இலட்சுமி தேவி வாசம் செய்யும் இடங்கள் !
X

G PradeepBy : G Pradeep

  |  6 Sep 2021 3:13 AM GMT

மஹாலட்சுமி தேவியை செல்வத்தின் அதிபதி என்கிறோம். மக்கள் இலட்சுமி தேவியின்

அருளை பெற வேண்டும் என்பதற்காகவும், அவருடைய அருளுக்கு பாத்திரமாக இருக்க

வேண்டும் என்பதற்காக பலவிதமான பூஜைகளை அர்பணங்களை செய்வார்கள். குபேரரின்

படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் இலட்சுமியின் அருளை பெற முடியும் எனவும்

சொல்லப்படுவதுண்டு. குபேரரின் படத்தை வைக்கும் இடம் மிகவும் சுத்தமானதாக இருக்க

வேண்டும்.

மேலும் இலட்சுமி தேவி வாசம் செய்யும் இடமாக சொல்லப்படும் புனித பொருட்கள் சில

உண்டு. உதாரணமாக, தேங்காய் பழம் என்பது அதன் புனிதத்தன்மை காரணமாக

வழிபாட்டுக்கு உகந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிறிய அளவிலான தேங்காயை

அதாவது இளம் தேங்காய்களை ஶ்ரீபழம் எனவும் அழைப்பதுண்டு. இந்த ஶ்ரீ பழத்தில்

இலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

அடுத்து ஆற்றல்களை தன் வசம் இழுக்க கூடிய பாதரசம். பாதரசத்திற்கு நல்லதிர்வுகளை

ஈர்க்ககூடிய தன்மை உண்டு. ஆன்மீக பிரதிஷ்டைகளில் பாதரசத்திற்கு மிக முக்கிய

பங்குண்டு. அந்த வகையில் பாதரசத்தால் ஆன இலட்சுமி சிலையை வீட்டில் வைத்திருப்பது

மிகுந்த பலனை தரும். அடுத்தாக சிறு சங்கு வடிவில் இருக்கும் சோழியில் இலட்சுமி தேவி

இருப்பதாக ஆன்மீக அறிஞர்கள் சொல்கின்றனர். கடலில் இருந்து எந்த கலப்படமும் இன்றி

கிடைக்கின்ற பொருட்களுள் இதுவும் ஒன்று.

தந்திர அறிவியலின் படி பார்த்தால், ஶ்ரீ யந்திரம் என்பது மிகவும் பலம்மிக்கதாக

கருதப்படுகிறது. யந்திரங்களின் அரசன் எனவும் ஶ்ரீ யந்திரத்தை அழைப்பார்கள். இதனை

பூஜை அறையில் வைப்பதால் பல நன்மைகள் நிகழும். மகாலட்சுமியின் கால் பாதுகையை

வெள்ளியில் செய்து வீட்டில் வைக்க வேண்டும். குறிப்பாக பணம் வைக்கும் இடத்தில்

வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தாமரை விதை அதாவது வடமொழியில் கட்டா என்பார்கள். தாமரை தான் இலட்சுமியின்

இல்லம் என்பதால் தாமரை மாலை இலட்சுமிக்கு மிக உகந்தது அதை போலவே, இந்த

தாமரை விதையால் ஆன மாலையை இலட்சுமிக்கு அணிவிக்கலாம்.

தெற்கு நோக்கி முகம் அமைந்த சங்கு இலட்சுமிக்கு மிக உகந்தது இதனை வீட்டின்

பூஜையறையில் வைத்து வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும். இவை

மட்டுமே செல்வம் பெருகுவதற்கான வழியா என கேட்பின், இவையெல்லாம் ஒரு ஆசிர்வாதம்.

ஆசிர்வாதம் என்பது யாரொருவர் கடினமாக உழைத்து தன் தனித்துவத்தை

வெளிப்படுத்துகிறாரோ அவருக்கு கிடைப்பதே ஆகும்.

Image : Story Of God.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News