விநாயகப் பெருமான் வழிபட்ட அனேக தங்காபதீஸ்வரர்!
விநாயகப் பெருமானே வழிபட்ட அனேக தங்காபதீஸ்வரர் திருத்தலத்தைப் பற்றி காண்போம்.
By : Karthiga
இரணியபுரத்தை ஆட்சி செய்து வந்தான் கேசி எனும் அரக்கன். அவனது முன் ஜென்ம வினையின் காரணமாக கணபதியின் சக்தியான வல்லபை என்ற தேவி கேசியின் மகளாகப் பிறந்தாள். வல்லமை வளரும் பருவத்திலேயே சிறந்த சிவபக்தையாக விளங்கினாள். சிவலிங்க பூஜை செய்வதில் அலாதி விருப்பம் கொண்டிருந்தள். இதனால் கோபம் கொண்ட கேசி வல்லபையை அடிக்கடி சிவ பூஜை செய்ய முடியாதபடி சிறைப்பூட்டி வைத்தான் .இதனால் மகேசனின் மருமகள் மனம் வாடினாள். இதை அறிந்த விநாயகப் பெருமான் கச்சிபதியிலேயே தீர்த்தம் உண்டாக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவபெருமான் மனம் குளிரும்படி பூஜை செய்தார் .
கேசியை அழிக்கும் ஆற்றலையும் வல்லபையை மணக்கும் வல்லமையையும் கயயிலைநாதரிடம் இருந்து பெற்ற விநாயகர், பின் தனது வாகனமான மூஞ்சூர் மீது ஏறி இரணியபுரத்தை அடைந்தார். அங்கு கேசியுடன் போரிட்டு கேசியை அழித்து வல்லபையையை மணந்தார். அது முதல் வல்லபை கணபதி என்று போற்றப்பட்டார் .அனேகபம் என்றால் யானை என்று பொருள். யானை முகத்தோன் சிவபெருமானை பூஜித்த காரணத்தால் அநேக தங்காபதம் என்று ஆனது இப்பகுதி. அனேகபம் என்றால் யானை என்று பொருள்.
யானை முகத்தோன் இங்கே சிவபெருமானை பூஜித்த காரணத்தால் 'அனேகதங்காபதம்' என்று ஆனது. இப்பகுதி வடநாட்டிலும் ஒரு அனேக தங்காபதம் இருப்பதனால் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இத்திருத்தலம் 'கச்சி அனேக தங்காபதம்' என்று வழங்கப்படலானது. பிள்ளையார் வழிபட்ட காரணத்தால் தற்போது இப்பகுதி பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இத்தல பெருமானை தனாதிபதியான குபேரன் வழிபட்டு வரம் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேர்ந்த இந்த நிகழ்வு அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து தேவார திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று .சுந்தரமூர்த்தி சுவாமிகள் காஞ்சியில் தங்கி இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். காஞ்சி மாநகரில் பிள்ளையார்பாளையத்தில் கடைகுடியில் உள்ள கைலாசநாதர் ஆலயத்திற்கு முன்பாக வடக்கு நோக்கி நுழைவு வாசலுடன் நம்மை வரவேற்கிறது அநேக தங்காபதிஸ்வரர் ஆலயம் .பல்லவர்கால திருக்கோவிலான இங்கே இரண்டாம் குலோத்துங்கன் திருப்பணி செய்துள்ளார். இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. இத்தல ஈசனை வழிபட்டால் திருமணத் தடை அகலும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர் என்கிறார்கள்.