Kathir News
Begin typing your search above and press return to search.

கலங்காமல் காத்த விநாயகர்!

ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் திருத்தலம் புராண காலத்தில் 'திருஇரும்பூளை' என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த தலத்தில் கலங்காமல் காத்த விநாயகர் அருள் பாலித்து வருகிறார்.

கலங்காமல் காத்த விநாயகர்!
X

KarthigaBy : Karthiga

  |  19 Sep 2023 11:45 AM GMT

ஒருமுறை விநாயகருக்கும் கஜமுகசுரனுக்கும் கடும்போர் ஏற்பட்டது. கஜமுகன் ஆட்சி செய்த மதங்கபுரத்தை விநாயகர் முற்றுகையிட்டார். அசுரன் விட்ட பானங்களை எல்லாம் தன் கரத்தில் இருந்த உலக்கையால் விலக்கி அதனைக் கொண்டே அசுரனின் மார்பில் விநாயகர் அடித்தார் . அவன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் ஆயுதங்களால் இறக்காதவன் என்பதை அறிந்த விநாயகர் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். இதனால் பயந்து போன கஜமுகன் பெருச்சாளி உருவம் கொண்டான் .


அவனை அடக்கி காத்து இன்பம் அளித்ததால் இத்தல விநாயகருக்கு 'கலங்காமல் காத்த விநாயகர்' என்று பெயர் வந்தது. அசுரன் அடக்கிய பிறகு அதுவரை அவனுக்கு செய்து வந்த தோப்புக்கரணம், தலையில் கொட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கு செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகரை தொடர்ந்து பல வாரங்கள் வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News